Published : 13 Dec 2023 07:13 AM
Last Updated : 13 Dec 2023 07:13 AM

உலக திறன் விளையாட்டு போட்டி: ராம்கோ சிமெண்ட் ஊழியர் இரு பதக்கங்கள் வென்றார்

சென்னை: பாரா விளையாட்டு வீரர்களுக்கான உலக திறன் விளையாட்டு போட்டி தாய்லாந்தில் உள்ள நகோன் ராட்சசிமா நகரில் கடந்த 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. 48 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற ராம்கோ சிமெண்ட் பணியாளரான தினேஷ் ராஜையா 2 பதக்கங்கள் வென்றார்.

உலக திறன் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற தினேஷ் ராஜையா இரட்டையர் (எஸ்எல் 3 - எஸ்எல் 4) பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஒற்றையர் பிரிவில் (எஸ்எல் 3) வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். பதக்கம் வென்றுள்ள தினேஷ் ராஜையாவுக்கு ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தினேஷ் ராஜையாவின் பாட்மிண்டன் பயணம் கடந்த 2017-ம் ஆண்டு ராம்கோ நிறுவனத்துடன் தொடங்கி உள்ளது. இதன் பின்னர் உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட 9 சர்வதேச தொடர்களில் பங்கேற்றதினேஷ் ராஜையா 7 பதக்கங்கள் வென்றுள்ளார். இதில் தற்போது கைப்பற்றியுள்ள இரு பதக்கங்களும் அடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x