Published : 30 Aug 2023 08:29 AM
Last Updated : 30 Aug 2023 08:29 AM
பெங்களூரு: உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு பேட்டிங் வரிசையில் 4 மற்றும் 5வது இடங்கள் பற்றி 18 மாதங்களுக்கு முன்பே தெளிவாக இருந்தோம். ஆனால் குறுகிய காலத்தில் 3 பேட்ஸ்மேன்கள் காயம் அடைந்ததால் தங்களது திட்டங்கள் சீர்குலைந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெங்களூருவில் பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் நேற்று நிரூபர்களிடம் கூறியதாவது:
பேட்டிங் வரிசையில் 4 மற்றும் 5வது இடம் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. அந்த இடங்களில் யார்? களமிறங்கப் போகிறார்கள் என்பதில் எங்களுக்கு தெளிவுஇல்லை என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. அந்த இரு இடங்களுக்கு 3 பேர் போட்டியில் இருந்தார்கள் என்பதை நான் உங்களுக்கு 18முதல் 19 மாதங்களுக்கு முன்பே கூறியிருக்க முடியும்.
இந்த போட்டியானது எப்போதும் ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல்,ரிஷப் பந்த் ஆகியோர் இடையே இருந்தது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. துரதிருஷ்டவசமாக இவர்கள்3 பேருமே 2 மாதகால இடைவெளியில் காயம் அடைந்தார்கள். இதனால் கத்தியின் கீழ் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. உலகக் கோப்பைதொடரை கருத்தில் கொண்டு அந்த இடங்களில் வேறு வீரர்களை பயன்படுத்தி பார்த்தோம்.
ஆனால் பரிசோதனை என்ற வார்த்தைஎங்கள் மீது யோசிக்காமல் தூக்கி வீசப்பட்டது. இது நாங்கள் பரிசோதனை செய்கிறோம் என்பது அல்ல. சில நேரங்களில் அதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்கும்.
ஸ்ரேயஸ் ஐயர் காயத்தில் இருந்துகுணமடைந்துவிட்டார். ஆசிய கோப்பையில் அவருக்கு களத்தில் ஆட்டநேரத்தை கொடுத்து உலகக் கோப்பைக்கு கட்டியெழுப்ப முடியும் என்று நம்புகிறோம். பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர்நன்றாக பந்து வீசுவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு ராகுல் திராவிட் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT