Published : 10 Dec 2017 09:29 AM
Last Updated : 10 Dec 2017 09:29 AM

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஜெர்மனி அணிகள் மோதின. முதல் இரு கால் பகுதியில் கோல்கள் ஏதும் அடிக்கப்படவில்லை. 42-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் கோலை அடித்தது. ஜெர்மனி கோல்கீப்பர் முன்னேறி வந்த நிலையில் அவருக்கு போக்குக் காட்டி ரிவர்ஷ் ஷாட் மூலம் இந்த கோலை ஆஸ்திரேலிய வீரர் டைலன் அடித்தார்.

4-வது கால் பகுதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் ஹேவர்டு ஜெர்மி கோல் அடிக்க ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற முன்னிலையை அடைந்தது. ஜெர்மனி அணியால் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்க முடியாமல் போனது. கடைசி நிடத்தில் டாம் விக்ஹாம் பீல்டு கோல் அடிக்க முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x