Published : 13 Nov 2017 03:17 PM
Last Updated : 13 Nov 2017 03:17 PM

இப்படி பேச பாஜகவிடம் அனுமதி வாங்கி விட்டீர்களா?- தம்பிதுரையை கிண்டல் செய்த ராமதாஸ்

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருந்த நிலையில் அவரை கிண்டல் செய்யும்விதமாக ராமதாஸ் ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "தமிழ் மற்றும் திராவிடக் கொள்கை கொண்ட தமிழகத்தில் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது" எனக் கூறினார்.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை இது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்படி பேச பாஜகவிடம் அனுமதி  வாங்கி விட்டீர்களா?" என கிண்டல் செய்துள்ளார்.

அவரது ட்வீட்:

தமிழக அரசு ஆளும் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என பல்வேறு கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக மூத்த எம்.பி.,யின் கருத்தை ராமதாஸ் ட்வீட் மூலம் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x