Published : 05 Nov 2017 09:18 AM
Last Updated : 05 Nov 2017 09:18 AM

ஒரு பேட்ஸ்மென் 200% ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்க வேண்டும்: விராட் கோலி

ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி பதிலடி கொடுத்ததையடுத்து விராட் கோலி பேட்டிங் தோல்விகளை ஒப்புக் கொண்டார்.

ரோஹித், தவணை போல்ட் ஒரே ஓவரில் காலி செய்ய பாண்டியா 1 ரன்னில் வெளியேற ஷ்ரேயஸ் ஐயர் 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 67/4 என்று 10 ஓவர்களில் இருந்தது, அடுத்த 10 ஓவர்களில் 130 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் கோலிக்கு தனது மந்தமான பேட்டிங்கினால் தோனி நெருக்கடியை அதிகரித்தார், தோனிக்கு ஓரிரு பெரிய ஷாட்கள் மாட்டிய நேரத்தில் ஆட்டம் முடிந்து விட்டது.

இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது:

நியூஸிலாந்து அணி தொடக்கத்தில் அருமையாக பேட்டிங் செய்தனர். வாய்ப்புகளை நாங்கள் நழுவ விட்டோம். ஆனால் ஒருநேரத்தில் நியூஸிலாந்து 235-240 ரன்களுக்கு தயாராக இருந்தனர். பும்ரா, புவனேஷ் ஆட்டத்தை மட்டுப்படுத்தினர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் பேட்டிங் சரியாக ஆடாமல் போனோம். 200 ரன்கள் பக்கம் விரட்டும் போது அனைவரும் ரன்கள் எடுக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மென் 200% ஸ்ட்ரைக் ரேட்டில் செல்ல வேண்டும், நான் என்னால் இயன்றதை முயற்சி செய்தேன். தோனி கடைசியில் நன்றாக ஆடினார். ஆனால் கடினமாக அமைந்தது. இப்படி நிறைய பேட்ஸ்மென்களுக்கு அமைந்து விடும்.

சில வேளைகளில் நல்ல பார்மில் இருப்பார்கள் ஆனால் போதுமான பந்துகள் இருக்காது. ஆனாலும் பேட்ஸ்மென்களை நான் ஆதரிக்கிறேன். ஹர்திக்கையும் ஆதரிக்கிறேன்.

13-14 ஓவர்கள் சமயத்தில் பந்து பிட்சில் க்ரிப் ஆகி வந்தது. ஆனால் சாக்குபோக்குகள் கிடையாது, பேட்டிங்கில் சோடை போனோம். பனிப்பொழிவு இல்லை, பந்து ஒரு கட்டத்தில் நின்று திரும்பியது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x