Published : 13 Jul 2023 07:25 AM
Last Updated : 13 Jul 2023 07:25 AM
புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) 4-வது சீசன் போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் இன்று தொடங்குகிறது.
இதில் பெங்களூரு ஸ்மாஷர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி டிடிசி, கோவா சேலஞ்சர்ஸ், புனேரி பல்தான் டேபிள் டென்னிஸ் மற்றும் யு மும்பா டிடி ஆகிய அணிகள் பட்டம் வெல்ல போராட உள்ளன. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 12 சர்வதேச வீரர்கள் உட்பட மொத்தம் 36 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இவர்களில் 14 வீரர்கள் ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளனர், 9 வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மேலும் இந்திய நட்சத்திரங்களான சத்தியன் ஞானசேகரன், மானவ் தக்கர், சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா உள்ளிட்டோரும் பல்வேறு அணிகளில் இடம் பெற்று விளையாட உள்ளனர்.
இன்று 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை லயன்ஸ், புனேரி பல்தான் அணியுடன் மோதுகிறது. சென்னை லயன்ஸ் அணியை இந்திய நட்சத்திர வீரர் அச்சந்தா ஷரத் கமல் வழிநடத்த உள்ளார். இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களையும் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா நேரலை செய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT