Published : 15 Jun 2023 07:28 AM
Last Updated : 15 Jun 2023 07:28 AM

இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் | லக்‌ஷயா சென், ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனா வின் ஹெங்குக்கு எதிராக பந்தை திருப்புகிறார் ஜப்பானின் அகானே யமகுச்சி. இதில் யமகுச்சி 6-21, 21-7, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்‌ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 20-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென், 11-ம் நிலை வீரரான மலேசியாவின் ஜியா லீயை எதிர்த்து விளையாடினார். 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக் ஷயா சென் 21-17, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

22-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-13, 21-19 என்ற நேர் செட்டில் 13-ம் நிலை வீரரான சீனாவின் ஸு லுவை தோற்கடித்தார். 2-வது சுற்றில் லக்‌ஷயா சென் - கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், தாய்லாந்தின் குன்லவுத் விதித்சரணுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக குன்லவுத் விதித்சரண் விலகினார். இதனால் பிரியன்ஷு ரஜாவத் 2-வது சுற்றில் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 43-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 10-21, 4-21 என்ற செட் கணக்கில் 2-ம் நிலைவீராங்கனையான கொரியாவின் அன் சே யங்கிடம் வீழ்ந்தார். - பிடிஐ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x