Published : 13 Oct 2017 10:10 AM
Last Updated : 13 Oct 2017 10:10 AM

வங்கதேசத்துடன் இன்று இந்திய அணி மோதல்

10-வது ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, தொடரை நடத்தும் வங்கதேசத்துடன் மோதுகிறது. வங்கதேசம் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 0-7 என தோல்வி கண்டிருந்தது. புதிய பயிற்சியாளர் மரிஜின் மேற்பார்வையில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியிடம் இருந்து மேலும் சிறந்த திறன் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மலேசியா 7-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென் கொரியா 7-2 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x