கருட சேவையை காண திரண்ட பக்தர்களால் ஸ்தம்பித்த திருமலை

கருட சேவையை காண திரண்ட பக்தர்களால் ஸ்தம்பித்த திருமலை
Updated on
2 min read

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி தொடங்​கியது. இவ்​விழா​வின் முக்​கிய நாளான நேற்று (5-ம் நாள்) கருட சேவைக் காண பக்​தர்​கள் திரு​மலை​யில் குவிந்​தனர். கருட சேவை​யுடன் புரட்​டாசி முதல் சனிக்​கிழமை​யும் நேற்று வந்​த​தால், பக்​தர்​களின் வருகை வழக்​கத்தை விட அதி​க​மாகவே இருந்​தது.

தமிழகம், கர்​நாடகம், ஆந்​தி​ரா, தெலங்​கானா ஆகிய மாநிலங்​களில் இருந்து திரளான பக்​தர்​கள் வெள்​ளிக்​கிழமை இரவு முதலே திரு​மலைக்கு படை எடுத்த வண்​ணம் இருந்​தனர். நேற்று காலை மோகினி அலங்​கார சேவை​யின்​போது திரு​மலை​யில் உள்ள 4 மாட வீதி​களி​லும் சுமார் 2 லட்​சம் பக்​தர்​கள் கூடி​யிருந்​தனர்.

இதுத​விர மற்ற பகு​தி​களில் சுமார் ஒரு லட்​சம் பேர் திரண்​டிருந்​தனர். மேலும் திருப்​பதி - திரு​மலை இடையே நேற்று மதி​யம் முதல் விடிய, விடிய சுமார் 2 லட்​சம் பேர் வந்து சென்​ற​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. ஆதலால் இந்த கருட சேவைக்கு சுமார் 5 லட்​சம் பக்​தர்​கள் திரண்டு உள்​ளனர்.

5000 போலீ​ஸார் பாது​காப்பு

கருட சேவையையொட்டி உள்​ளூர் மற்​றும் வெளி மாநிலங்​களில் இருந்து ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்டு வரு​வார்​கள் என ஏற்​கெனவே எதிர்​பார்க்​கப்​பட்​ட​தால், சுமார் 5,000 போலீ​ஸார் பாது​காப்பு பணி​களில் ஈடு​பட்​டனர். மேலும் தேவஸ்​தான கண்​காணிப்பு படை​யினரும் பாது​காப்பு பணி​களில் ஈடு​பட்​டனர். இதுத​விர, ஆக்​டோபஸ் கமாண்டோ படை, ஆயுதப்​படை​யினரும் தீவிர ரோந்து பணி​களில் ஈடு​பட்​டிருந்​தனர்.

ட்ரோன் கேமரா மூலம் 24 மணி நேர​மும் கண்​காணிக்​கப்​பட்​டது. பாது​காப்பு கருதி வெள்​ளிக்​கிழமை மாலை 6 மணி​யில் இருந்து இருசக்கர வாக​னங்​கள் திரு​மலைக்கு செல்ல தடை விதிக்​கப்​பட்​டது. ஏழு​மலை​யானை தரிசிக்க அனைத்து சிறப்பு தரிசனங்​களும் ரத்து செய்​யப்​பட்​ட​தால், வெறும் சர்வ தரிசனம் வாயி​லாக மட்​டுமே ஏழு​மலை​யானை பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர்.

நேற்று மாலை சரி​யாக 6.30 மணிக்கு கருட வாக​னத்​தில் மலை​யப்​பர் திரு​மலை​யில் உள்ள வாகன மண்​டபத்​திலிருந்து எழுந்​தருளி​னார். அப்​போது விண்​ணைப் பிளக்​கும் அளவுக்கு கோவிந்தா கோவிந்தா என பக்​தர்​கள் கோஷமிட்​டனர். பின்​னர் மாட வீதி​களில் கருட வாகன சேவை நீடித்​தது. எங்கு பார்த்​தா​லும் பக்​தர்​கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

ஆங்​காங்கே அமைக்​கப்​பட்​டிருந்த ராட்சத டிவி மூலம் தேவஸ்​தானத்​தின் எஸ்​விபிசி சேனல் வாகன சேவையை நேரடி ஒளிபரப்பு செய்​தது. காலை 10 மணி முதலே பக்​தர்​களுக்கு அன்ன​தானம் வழங்​கப்​பட்​டது.

மாட வீதி​கள் உட்பட திரு​மலை​யில் பல இடங்​களில் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம், குடிநீர், தேநீர் போன்​றவை வழங்​கப்​பட்​டது. தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு, நிர்​வாக அதி​காரி எம். ரவிச்​சந்​தி​ரா, கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி உட்பட பல்​வேறு அதி​காரி​கள்​ அடிக்​கடி பக்​தர்​களிடம்​ வசதி​கள்​ மற்​றும்​ குறை​களை கேட்​டறிந்​தனர்​.

கருட சேவையை காண திரண்ட பக்தர்களால் ஸ்தம்பித்த திருமலை
கர்நாடகாவின் 2-வது கூடுதல் நிர்வாக மொழி ஆகிறது துளு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in