திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்

‘கந்தனுக்கு அரோகரா’ முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று கோலாலகமாக நடைபெற்றது. மலையை சுற்றி வந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். | படங்கள்: நா.தங்கரத்தினம் |

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று கோலாலகமாக நடைபெற்றது. மலையை சுற்றி வந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். | படங்கள்: நா.தங்கரத்தினம் |

Updated on
2 min read

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பங்​குனித் திரு​விழா​வின் 13-ம் நாளான நேற்று தேரோட்​டம் நடை​பெற்​றது. ‘முரு​க​னுக்கு அரோக​ரா, கந்​தனுக்கு அரோக​ரா’ என ஆயிரக்கணக்​கான பக்​தர்​கள் முழக்​கத்​துடன் தேரைவடம் பிடித்து இழுத்தனர்.

முரு​கப் பெரு​மானின் முதல்​படை வீடான திருப்பரங்குன்றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பங்​குனி திரு​விழா கடந்த மார்ச் 23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

தின​மும் காலை மாலை​யில் சுவாமி, அம்​மன் பல்​வேறு வாக​னங்​களில் எழுந்​தருளினர். 11-ம் நாள் பட்​டாபிஷேகம், 12-ம் நாளான நேற்று முன்​தினம் சுப்​பிரமணிய சுவாமிக்​கும் தெய்​வானைக்​கும் திருக்​கல்​யாணம் நடை​பெற்​றது.

முக்​கிய விழா​வான தேரோட்​டத்​தையொட்டி அதி​காலை 5.45 மணி​யள​வில் உற்​சவர் சந்​நி​தியி​லிருந்து சுப்​பிரமணிய சுவாமி, தெய்​வானை சிறப்பு அலங்​காரத்​தில் கோயில் முன்​புள்ள தேரில் எழுந்​தருளினர்.

<div class="paragraphs"><p>சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சி தந்த சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை.</p></div>

சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சி தந்த சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை.

முதலில் விநாயகர் சப்​பரத் தேருக்கு தீபா​ராதனை நடை​பெற்​று, பின்​னர் காவல் தெய்​வ​மான கருப்​பண​சாமிக்கு தீபா​ராதனை நடந்​தது.

தொடர்ந்து 6.15 மணிக்கு பெரிய வைரத்​தேரில் எழுந்​தருளிய சுப்​பிரமணிய சுவாமிக்​கும், தெய்​வானைக்​கும் தீபா​ராதனை முடிந்து காலை 6.15 மணி​யள​வில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தேரின் வடம் பிடித்து இழுக்க, தேரோட்​டம் தொடங்​கியது.

பக்​தர்​கள் ‘முரு​க​னுக்கு அரோகரா, கந்​தனுக்கு அரோக​ரா’ என முழக்​கம் எழுப்​பியபடி தேரை வடம் பிடித்து இழுத்​தனர். 3.5 கி.மீ. சுற்​றளவுள்ள கிரிவலப் பாதை​யில் மக்​கள் வெள்​ளத்​தில் தேர் அசைந்து ஆடி வந்​தது.

வழிநெடு​கிலும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்டு முரு​கனை தரிசனம் செய்​தனர். கிரிவலப்​பாதை​யில் வலம் வந்த தேர் மீண்​டும் பகல் 12 மணி​யள​வில் நிலையை அடைந்​தது.

வெளி மாவட்​டங்​களி​லிருந்து ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். மாநகர் காவல் துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன் தலை​மை​யில் 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். மாநக​ராட்சி சார்​பில் குடிநீர் வசதி​கள் செய்​யப்​பட்​டிருந்​தன.

இரவு தங்​கம​யில் வாக​னத்​தில் சுவாமி​யும், அம்​மனும் எழுந்​தருளினர். இதில் ஏராள​மான பக்​தர்​கள் கலந்து கொண்​டனர். மேலும் 14-ம் நாளான இன்று (ஏப்​.6) காலை தீர்த்​த​வாரி உற்​சவம் நடை​பெறுகிறது.

கொடிமரத்​துக்கு முன்​புள்ள யாக​சாலை​யில் 13 நாள் வைத்து பூஜை செய்த 32 கலசங்​களி​லிருந்து புனிதநீர் மூலம் சுவாமி- தெய்​வானைக்​கும் அபிஷேகம் நடை​பெறும். பின்​னர் சரவணப் பொய்​கை​யில் தீர்த்​த​வாரி உற்​சவம் நடை​பெறும்.

இரவு தங்​கம​யில் வாக​னத்​தில் சுவாமி புறப்​பாடு நடை​பெறும். பின்​னர் கொடி​யிறக்​கத்​துடன் விழா நிறைவு​பெறும். விழா ஏற்​பாடு​களை அறங்​காவலர் குழுத் தலை​வர் சத்​யபிரி​யா, துணை ஆணை​யர் ரா.​ஞான​சேகரன் ஆகியோர் தலை​மை​யில் அறங்​காவலர்​கள், கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

மத நல்​லிணக்கத்தை வலி​யுறுத்​தும் வகை​யில் சிக்​கந்​தர் பாதுஷா பள்​ளி​வாசல் நிர்​வாகம் சார்​பில் பக்​தர்​களுக்கு நீர் மோர், சர்​பத், குளிர் பானங்​களை வழங்​கப்பட்டன. தேரோடும் வீதி​யில் தண்​ணீர் தெளித்து குளிர்​வித்​தனர். வழி நெடு​கிலும் தன்​னார்​வலர்​கள், தனி​யார் அமைப்​பினர் சார்​பில் அன்​ன​தானம், நீர் மோர் வழங்​கப்​பட்​டன.

<div class="paragraphs"><p>திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று கோலாலகமாக நடைபெற்றது. மலையை சுற்றி வந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். | படங்கள்: நா.தங்கரத்தினம் |</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 ஏப்ரல் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in