

மேஷம்: முன்கோபத்துக்கு இடம்தராதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. குடும்பத்தில் வீண் வாக்குவாதம் வேண்டாம். அலுவலக ரீதியாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பணத்தை கவனமாக கையாளுங்கள்.
ரிஷபம்: வீட்டில் இழுபறியாக இருந்த கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். வீடு, கடையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தொழில், வியாபாரம் திருப்திகரமாக அமையும்.
மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
கடகம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கு விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டு. வியாபார வளர்ச்சிக்கு புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்: புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வியாபாரத்தில் நிதானமாக செயல்படுங்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
கன்னி: பிரச்சினையில் இருந்து விடுபட, மாற்று வழியைக் கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். உத்யோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு. நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிக்கு பாராட்டு கிடைக்கும்.
துலாம்: உங்கள் வெளிப்படையான, சாதுர்யமான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்: காரியத் தடை, திடீர் பயணம், அலைச்சல், அசதி இருந்தாலும், ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். அலுவலகப் பணியில் கவனம் தேவை.
தனுசு: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் சோர்வு, வயிற்று வலி குணமாகும். தொழில், வியாபாரத்தில் வராது என நினைத்த பழைய பாக்கி வசூலாகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மகரம்: வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவி கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக முக்கியப் பிரமுகர்களை சந்திப்பீர்கள். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும்.
கும்பம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண், ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கியப் பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலக ரீதியான பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும்.