Published : 26 May 2017 10:57 AM
Last Updated : 26 May 2017 10:57 AM

ஜோதிடம் என்பது அறிவியலா?- 13: எட்டு போடும் சூரியன்

சூரியனின் ஒளி பூமியை அடைய கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் ஆகிறது. இயற்கையில் சூரியன் ஒரு நட்சத்திரமாக இருந்தாலும் ஜோதிடத்தில் சூரியன் கிரகமாவே பார்க்கப்படுகிறார். பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியன் நகர்வது போல் தெரிந்தாலும் மேலும் அதன் ஈர்ப்பு விசை தாக்கம் பூமியில் இருப்பதாலும், சூரியன் கிரகமாகவே பார்க்கப்படுகிறது.

சூரியனின் ஒளிபடும் இடங்களை வைத்து, பூமியை மூன்று மாய ரேகைகள் கொண்டு பிரிக்கப்பட்டதாக நாம் அறிவோம். அதற்கு அடிப்படையாக இருந்ததே நமது ஜோதிடம் தான் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

எட்டு போடும் சூரியன்

வானத்தில் சூரிய ஒளியானது எந்த பாதையில் பயணம் செய்கிறது என்ற ஆய்வை மேற்கண்ட போது, சூரியன் எட்டு (8) என்ற எண் வடிவிலான பயணத்தை மேற்கொள்கிறது என்ற உண்மை புரிந்தது. படத்தில் இருக்கும் மகரத்தில் இருந்து கடகம் வரை செல்லும் சூரியன், தனது அதிக வெப்பத்தை வெளிபடுத்த தொடங்கும் தருணமே உத்திராயணம் என்று அறியலாம். கடகத்தில் இருந்து மகரம் செல்லும் வரை செல்லும் சூரியன், தனது வெப்பத்தை குறைவாக பூமியின் மீது செலுத்தும் தருணமே தட்சிணாயணம் ஆகும்.

இதில் கடகத்தில் இருந்து மகரம் வரை செல்லும் சூரிய ஒளி பாதை மற்றும் மகரத்தில் இருந்து கடகம் வரை இருக்கும் சூரிய ஒளி பாதை சந்திக்கும் இடமே 'பூமத்திய ரேகை' என்று அழைக்கபடுகிறது. பூமத்திய ரேகை இடத்தில் சூரியன் உச்சமும் மற்றும் நீச்சமும் பெறுவதால், பூமத்திய ரேகை செல்லும் இடங்களில் அளவுக்கு அதிக வெப்பமும், அளவுக்கு அதிக குளிரும் நிலவுகிறது.

நன்கு கவனித்து கொண்டு வந்தால் சூரிய பாதையானது 8 என்ற எண் வடிவில் அமைவதை அறியலாம்.

இந்த சூரிய ஒளி பாதை பயணம் என்பது உலகில் நடக்கும் இயற்கை சீற்றங்களை மற்றும் பருவ மழை பற்றி அறிய உதவும் ஒரு காரணி ஆகும்.

இந்த பயணப் பாதை காண்பதற்கு சிவபெருமான் நெற்றிகண் போன்ற தோற்றம் தரும்.

(மேலும் அறிவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x