Published : 14 Jun 2022 05:43 AM
Last Updated : 14 Jun 2022 05:43 AM

ஆன்லைன் அங்க பிரதட்சண டிக்கெட்டுகள் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆன்லைன் தரிசன முறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பின்பற்றி வருகிறது. தற்போது ரூ. 300 சிறப்பு தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் தரிசனம், ஆர்ஜித சேவைகளை ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து அவர்களின் வசதிக்கேற்ப சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.

தினமும் அதிகாலை 2 மணியளவில் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காகவும் தற்போது ஆன்லைனில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு இதற்கான ஆன்லைன் டோக்கன்கள் தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளது. இந்த டோக்கன்களை பெறும் பக்தர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அங்கபிரதட்சணம் செய்து சுவாமியை வழிபடலாம். இதற்காக தினமும் 750 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். ஆனால் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவதால் இன்று இரவு நடைபெற உள்ள கருட சேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x