Last Updated : 11 Feb, 2016 08:14 AM

 

Published : 11 Feb 2016 08:14 AM
Last Updated : 11 Feb 2016 08:14 AM

தெய்வீகம் வாசிக்க இங்கே வாங்க..!

‘ஆன்மாவின் அறிவியல் ஆன்மிகமே!' என்று ஆன்மிகத்திற்குப் புத்தொளி பாய்ச்சியவர் சுவாமி விவேகானந்தர். அவர் நினைவைப் போற்றும் வகையில் விவேகானந்தர் நவராத்திரி மற்றும் தெய்வீக புத்தகத் திருவிழா சென்னையில் காமரஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லதில் வருகிற 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.



ஒவ்வொரு நாளும் மதியம் 2 மணி முதல் 8 மணி வரை புத்தகக் கண்காட்சி திறந்திருக்கும். புத்தகங்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் உண்டு. மேலும் இந்தக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.

இந்த தெய்வீக புத்தகத் திருவிழாவில் இளைஞர் முன்னேற்றம், நல்வழிக் கதைகள், மனநலம், தியானப் பயிற்சி, இந்தியப் பாரம்பரியப் பெருமைகள், யோகா, ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

'இளைஞர் சக்தியே மாபெரும் சக்தி' என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் நினைவுச் சின்னமாக அமைந்திருப்பது சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லம். இந்த இல்லம் முன்பு 'ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது.

1897ம் ஆண்டு விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மகாசபையில் கலந்துகொண்ட பின்னர் சென்னைக்கு வந்தார். பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஐஸ் ஹவுஸில் தங்கியிருந்து, பல சொற்பொழிவுகளை ஆற்றினார். இதனால் இந்த இல்லம் 'விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படுகிறது.

தற்பொழுது இந்த இல்லத்தைப் பராமரித்து வரும் அவரின் சீடர்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை விவேகானந்தர் நவராத்திரியாக கொண்டாடி வருகின்றனர். அந்த நாட்களில் சொற்பொழிவுகளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு முதல் விவேகானந்தர் நவராத்திரியின்போது இந்த ஆண்டு முதல் தெய்வீக புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இந்தப் புத்தகக் கண்காட்சி குறித்து விவேகானந்தர் இல்லத்தைச் சேர்ந்த..... கூறும்போது "இந்த தெய்வீக புத்தகத் திருவிழா இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எல்லா வயதினரும் இங்கு வரலாம். அனுமதி இலவசம். இளைஞர்கள் அறிவையும் ஆற்றலையும் பெற வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத் திருவிழாவின் நோக்கம். சுவாமி விவேகானந்தர் இல்லத்தையும் சுற்றிப் பார்க்கலாம். விவேகானந்தர் குறித்து புதிதாக இங்கு 3டி படமும் திரையிடப்படுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x