Published : 09 Jul 2019 07:57 AM
Last Updated : 09 Jul 2019 07:57 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கிவர வாய்ப்பிருக்கிறது.

 

ரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் கைகூடி வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

 

மிதுனம்: கடந்த காலத்தில் நடந்த இனிமையான நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். தாயாருடன் எதிர்பாராத வகையில் கருத்துமோதல் வரும். வாகனத்தில் மிதமான வேகத்தில் செல்லுங்கள்.

 

கடகம்: பிரச்சினைகளை சமாளிக்கும் வழி கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்களின் அறிமுகம் நன்மையைக் கொடுக்கும். புதிய நண்பர்களால் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.

 

சிம்மம்: பணத்தட்டுப்பாடு நீங்கும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். திடீர் பயணம் உண்டு.

 

கன்னி: மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். காய், கனி, கீரை வகைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

 

துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதரர் வகையில் அன்புத் தொல்லை அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விருந்தினர் வருகை உண்டு.

 

விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். பங்கு வர்த்தகம் மூலமாகவும் ஆதாயம் உண்டு. மனைவி ஆதரவாகப் பேசுவார். மனைவிவழி உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள்.

 

தனுசு: சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீட்டு திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீரமைப்பீர்கள்.

 

மகரம்: தன்னம்பிக்கை பெருகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். சமுதாயத்தில் பிரபலமானவர்களுக்கு நெருக்கமாவீர்கள். யோகா, தியானம் என மனதை நிலைப்படுத்துவீர்கள்.

 

கும்பம்: இரவுப் பயணங்களை தவிர்த்து விடுங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்-. உங்களின் பலம், பலவீனத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது.

 

மீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு-. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x