Published : 30 Mar 2017 04:26 PM
Last Updated : 30 Mar 2017 04:26 PM

திருவல்லிக்கேணி - ஸ்ரீபெரும்புதூர்: ராமானுஜர் 1000-க்காக பிரம்மாண்ட பாதயாத்திரை நிகழ்ச்சி

ஸ்ரீராமானுஜரின் 1000-வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக, திருவல்லிக்கேணியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை பாதயாத்திரை செல்ல ’சமுதாய நல்லிணக்கப் பேரவை’ ஏற்பாடு செய்துள்ளது.

2016 மே மாதத்திலிருந்தே ஸ்ரீ ராமானுஜரின் 1000-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் பல்வேறு விதங்களில் தொடங்கிவிட்டன. இதையொட்டி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சமுதாய நல்லிணக்கப் பேரவை, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. தற்போது திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோயிலில் இருந்து, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் வரை, சமுதாய நல்லிணக்கப் பாதயாத்திரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1000-க்கும் அதிகமான யாத்ரீகர்கள், ஸ்ரீ ராமானுஜரின் சிந்தனைகளை முழக்கமிட்டு இந்த பாதயாத்திரையில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள். யாத்திரை வழியில் அங்கங்கு ஓய்வெடுக்க குறிப்பிட்ட இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முக்கிய விளையாட்டு வீரர்கள், கர்னாடக சங்கீத இசைக் கலைஞர்கள், பக்தி பாடல் பாடுபவர்கள், திரைக் கலைஞர்கள் எனப் பலரும் ஓய்வெடுக்கும் இடங்களுக்கு வர இருக்கின்றனர். நமது பாரம்பரியத்தை போற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

ஏப்ரம் 1-ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த பாத யாத்திரை, ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் நிறைவடையும். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஜீயர் சுவாமிகள் நிறைவுப் பகுதியில் பக்தர்களை ஆசிர்வதிப்பார்.

இந்த பாதயாத்திரை குறித்த மேலும் தகவல்களுக்கு: 94445 07315, 94433 34465

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x