Published : 14 Jun 2017 03:21 PM
Last Updated : 14 Jun 2017 03:21 PM

ஆனி மாத நட்சத்திர பலன்கள் - பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

பூரட்டாதி

அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படும் பூரட்டாதி நக்ஷத்திர அன்பர்களே, இந்த மாதம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. புதிய நட்பு உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: வடபழனி முருகனை வணங்கி வர தொல்லைகள் நீங்கும். நன்மை உண்டாகும்.

+: பணவரத்து திருப்தி தரும்

-: அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.



உத்திரட்டாதி

எண்ணியதை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் உத்திரட்டாதி நக்ஷத்திர அன்பர்களே, இந்த மாதம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மற்றவர்களுடன் வீண்பகை உண்டாகலாம். எனவே கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும்.

தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர் பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும்.

பெண்களுக்கு எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பவுர்ணமி பூஜை செய்து மகாலட்சுமியை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். மன அமைதி உண்டாகும்.

+: சுப நிகழ்ச்சிகளில் இருந்த தாமதம் நீங்கும்

-: வீண் அலைச்சல் ஏற்படலாம்.



ரேவதி

எதையும் சுலபமாக புரிந்த கொள்ளக் கூடிய ரேவதி நக்ஷத்திர அன்பர்களே, நீங்கள் பதட்ட குணத்தை கைவிடுவது முன்னேற்றத்துக்கு உதவும். இந்த மாதம் காரிய தாமதம் உண்டாகும். ஏதாவது ஒருவகையில் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். பொருட் களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு: கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும். வாகனங் களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: சுந்தரகாண்டம் படித்து பெருமாளை வணங்கி வர சகல நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

+: பதவி உயர்வு ஏற்படும்

-: உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x