Published : 23 Mar 2017 10:00 AM
Last Updated : 23 Mar 2017 10:00 AM

வார ராசிபலன் 23-03-2017 முதல் 29-03-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் 11-ல் ராகுவும் உலவுவது நல்லது. நிர்வாகத்திறமையால் சாதனைகள் ஆற்றுவீர்கள். அரசாங்கத்தால் எதிர்பார்த்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். திரவப்பொருட்கள் லாபம் தரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

பயணத்தின் மூலம் நலம் உண்டாகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை துறைகள் ஆக்கம் தரும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். 5-ல் கேது இருப்பதால் மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். மக்களைப் பற்றிய கவலை இருக்கும். கணவன் மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும். குரு 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் பணவரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 23, 26. l திசைகள்: தென் மேற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை, ஆரஞ்சு. l எண்கள்: 1, 4, 5.

பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும்.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் வந்து சேரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். உழைப்பும் அலைச்சலும் அதிகமானாலும் அதற்கான பயனும் கிடைத்துவரும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். மாதர்களது நிலை உயரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது நோக்கம் ஈடேறும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கிலும் போட்டிகளிலும் விளையாட்டுகளிலும் வெற்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 23, 26.

திசைகள்: தென் மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை | எண்கள்: 3, 4, 6, 9.

பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் புதனும் சுக்கிரனும் 5-ல் செவ்வாயும், 10-ல் வக்கிரமாக குருவும் உலவுவது நல்லது. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பேச்சில் திறமை வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். மாணவர்களது திறமை வெளிப்படும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். திரவப் பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 23, 26. l திசைகள்: வட மேற்கு, தென் கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு. l எண்கள்: 3, 5, 6, 7, 9.

பரிகாரம்: ஏழை, எளியவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ம் இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பது சிறப்பாகும். சூரியன், சுக்கிரனும் அனுகூலமாக உலவுகிறார்கள். இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பொருளாதார நிலை உயரும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும்.

நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது தொடர்பு பயன்படும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். நிலபுலங்கள் சேரும். சொத்துகள் மூலம் வருவாய் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 23, 26. திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், ஆரஞ்சு, வெண்மை.

எண்கள்: 1, 6, 8. l பரிகாரம்: நாக பூஜை செய்யவும். மகா விஷ்ணுவை வழிபடுவது நல்லது.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் வக்கிரமாக இருப்பதால் நலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பல வழிகளில் வருவாய் கிடைத்துவரும். பேச்சில் திறமை வெளிப்படும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் முன்னணிக்கு உயருவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

எதிரிகள் அடங்கிப் போவார்கள். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். பொது நலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். வாழ்க்கைத் துணைவராலும், கூட்டாளிகளாலும் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதி: மார்ச் 26. l திசைகள்: தென்கிழக்கு, வ்டக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு. l எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: விநாயகரையும் துர்க்கையையும் வழிபடவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுதால் தோற்றப்பொலிவு கூடும். கலைத்துறை ஊக்கம் தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பயணம் சார்ந்த துறைகள் லாபம் தரும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். மக்கள் நலம் சீராகும்.

7-ல் வக்கிர குருவும், ஜன்ம ராசியில் புதனும் வக்கிர சுக்கிரனும் இருப்பதால் கணவன் மனைவி இடையே சில சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் உடல் நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.

அதிர்ஷ்டமான தேதி: மார்ச் 23. l திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை. l எண்கள்: 4, 6.

பரிகாரம்: விநாயகரையும் சூரிய நாராயணரையும் வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x