Published : 09 Mar 2017 09:43 AM
Last Updated : 09 Mar 2017 09:43 AM

வார ராசிபலன் 09-03-2017 முதல் 15-03-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். செய்தொழிலில் வளர்ச்சி காண வார முன்பகுதியில் வாய்ப்புக் கூடிவரும். திரவப்பொருட்கள் லாபம் தரும். கணிதம், எழுத்து, பத்திரிகைத் துறைகள் ஆக்கம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதியவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். ஆராய்ச்சியாளர்களுக்கு வரவேற்பு கூடும். புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் பெயரும் புகழும் பெறலாம்.

10-ம் தேதி முதல் குரு 12-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. பொருளாதார நிலை ஏற்றம் இறக்கமாகவே காணப்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 14-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடத்திற்கு மாறுவதால் அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தந்தையால் நலம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்குக் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 9, 15 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை.

எண்கள்: 4, 5. l பரிகாரம்: குரு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். ஸ்ரீ சூக்தம் படிக்கவும்.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 10-ல் ராகுவும் உலவுவது நல்லது. 10-ம் தேதி முதல் குரு 11-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். 14-ம் தேதி முதல் சூரியன் ஐந்தாமிடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும்.

பயணத்தால் நினைத்த காரியம் ஈடேறும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் வந்து சேரும். பெரியவர்கள், தனவந்தர்கள் உதவி புரிவார்கள். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு உற்சாகம் பெருகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். உடல் நலம் சீராகும். வழக்குகள், போட்டிகளில் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 9, 14, 15 (முற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 3, 4, 6, 9. l பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனைகள் செய்யவும். ஹனுமனையும் விநாயகரையும் வழிபடவும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் குரு 11-ல் உலவுவது சிறப்பாகும். சூரியன், புதன், சுக்கிரன், கேது அனுகூலமாக உலவுகிறார்கள். 10-ம் தேதி முதல் குரு 10-ம் இடத்திற்கு மாறுவதும், 14-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடத்துக்கு மாறுவதும் சிறப்பாகாது. வார முன்பகுதி சாதாரணமாகவே இருக்கும். அலைச்சல் கூடும். உடல் அசதி ஏற்படும். வீண் செலவுகளும் இழப்புக்களும் உண்டாகும். காரிய தாமதம் ஆகும். வாரப் பின்பகுதி முன்பகுதியை விடச் சிறப்பாக அமையும். முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும்.

அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். வியாபாரிகளுக்கு நல்ல திருப்பம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள் சேரும். ஆன்மிகவாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 14, 15.

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6, 7. l பரிகாரம்: கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவிசெய்யவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ம் இடத்தில் உலவுவது விசேடமாகும். சுக்கிரனும் அனுகூலமாக உலவுகிறார். 10-ம் தேதி முதல் குரு 9-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. 14-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு என்றாலும் பாதுகாப்பும் தேவை.

புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். விஷ பயம் ஏற்படும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வாரக் கடைசியில் தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 9, 15.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, வெண்மை.

எண்கள்: 5, 6, 8. l பரிகாரம்: சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



கும்ப ராசி வாசகர்களே

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி அனுகூலமாக உலவுகிறார்கள். 10-ம் தேதி முதல் குரு 8-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. 14-ம் தேதி முதல் சூரியன் இரண்டாமிடத்துக்கு மாறுவது குறை. அலைச்சல் கூடவே செய்யும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். சுபக் கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால் சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். பண நடமாட்டம் அதிகரிக்கும்.

கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள், மாதர்களது நோக்கம் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 9, 15 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 5, 6, 8, 9. l பரிகாரம்: விநாயகரையும் துர்க்கை அம்மனையும் வழிபடவும்.



மீன ராசி வாசகர்களே

சுக்கிரன், ராகு அனுகூலமாக உலவுகிறார்கள். 10-ம் தேதி முதல் குரு ஏழாமிடம் மாறுவது நல்லது. 14-ம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. கலைத் துறையினருக்கும் மாதர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் வாங்குவீர்கள். பெண்களால் ஆடவர்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

பொருளாதார நிலை உயரும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி துறைகள் லாபம் தரும். பயணம் சார்ந்து வருவாய் கிடைக்கும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மக்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். உஷ்ணாதிக்கம் மூலம் உபத்திரவம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 9, 14, 15 (முற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம்.

எண்கள்: 4, 6. l பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும். பித்ருக் கடன் ஆற்றவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x