Published : 09 Apr 2015 03:29 PM
Last Updated : 09 Apr 2015 03:29 PM

வார ராசிபலன் 9-4-2015 முதல் 15-4-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்கள்

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் கேதுவும் 8-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். முக்கியஸ்தர்களது சந்திப்பு பயன்படும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். மாதர்களது நிலை உயரும். 2-ல் சனியும், 7-ல் செவ்வாயும் புதனும் இருப்பதால் வாழ்க்கைத்துணைவரால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 14-ம் தேதி முதல் சூரியன் 7-மிடம் மாறுவதால் பிரச்சினைகள் அதிகரிக்கவே செய்யும். வீண்வம்பு வேண்டாம்.

15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று நேர்கதியில் 10-ல் உலவத் தொடங்குவதால் செய்தொழிலில் அதிகக் கவனம் தேவை. இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 10, 14, 15.

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7.

பரிகாரம்: துர்கைக்கும் திருமாலுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.



விருச்சிக ராசி வாசகர்கள்

உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 6-ல் உலவுவது சிறப்பாகும். புதன், குரு, ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகைபோன்ற இனங்கள் ஆக்கம் தரும். பொருளாதார நிலை உயரும்.

14-ம் தேதி முதல் சூரியன் 6-மிடம் மாறி வலுப்பெறுவதால் அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தந்தை நலம் சீராகும். 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று 9-ல் நேர்கதியில் உலவத் தொடங்குவதால் சுபிட்சம் கூடும். சுப காரியங்கள் நிகழும். மன உற்சாகம் பெருகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 10, 14, 15.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு,வடக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு, பச்சை.

எண்கள்: 3, 4, 9.

பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடுவது நல்லது. ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.



தனுசு ராசி வாசகர்கள்

உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாயும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் அளவோடு நலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். 4-ல் சூரியனும் கேதுவும், 12-ல் சனியும் இருப்பதால் சுகம் குறையும். செலவுகள் கூடும்.

தாய் நலனில் கவனம் தேவை. சுக்கிரன் 6-லும் குரு 8-லும் இருப்பதால் கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. 14-ம் தேதி முதல் சூரியன் 5-மிடம் மாறுவதால் மக்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்.10, 14, 15.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, புகை நிரம்.

எண்கள்: 4, 9.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது. விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.



மகர ராசி வாசகர்கள்

உங்கள் ராசிநாதன் சனி 11-ஆமிடத்தில் உலவுவது சிறப்பாகும். சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பொதுப் பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும். தொழிலாளர்களது நிலை உயரும். விவசாயம் பெருகும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். கணிதம், வியாபாரம், எழுத்து, பத்திரிகை போன்ற இனங்கள் லாபம் தரும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

14-ம் தேதி முதல் சூரியன் 4-மிடம் மாறுவது சிறப்பாகாது. உஷ்ணாதிக்கத்தால் பாதிக்கப்பட நேரலாம். 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:,ஏப். 14, 15.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, மெரூன்.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 8..

பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.



கும்ப ராசி வாசகர்கள்

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும், 4-ல் சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். பொதுப்பணிகள் ஆக்கம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். சூரியன், புதன், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்ப நலனில் கவனம் தேவை.

அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. 14-ம் தேதி முதல் சூரியன் 3-மிடம் மாறுவது விசேடமாகும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும்.

கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்.10, 14 (பிற்பகல்), 15.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், சிவப்பு.

எண்கள்: 6, 8, 9 .

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது. துர்கையையும் விநாயகரையும் வழிபடவும்.



மீன ராசி வாசகர்கள்

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாயும் புதனும் 5-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 9-ல் சனி இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.

14-ம் தேதி முதல் சூரியன் 2-மிடம் மாறுவதும் சிறப்பாகாது. முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். என்றாலும் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று நேர்கதியில் 5-மிடத்தில் அதிபலத்துடன் உலவுவதால் மன மகிழ்ச்சி கூடும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். பரம்பரைத் தொழில் அதிக லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 10, 14 (முற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 9.

பரிகாரம்: சூரியன், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x