Published : 23 Jul 2015 12:35 PM
Last Updated : 23 Jul 2015 12:35 PM

வார ராசி பலன் 23-07-2015 முதல் 29-07-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 3-ல் உலவுவது விசேஷம். புதன், குரு, சுக்கிரன், ராகுவின் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் எதிர்ப்புகள் விலகும். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டி பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

நிலபுலங்கள் சேரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பயணத்தால் காரியம் நிறைவேறும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருக்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். பெண்களின் எண்ணம் ஈடேறும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். வாரப் பின்பகுதியில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். அதனால் மன அமைதி குறையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23, 29 (பிற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, புகை நிறம், பொன்நிறம், இளநீலம், வெண்மை.

எண்கள்: 3, 4, 5, 6, 9. ‎

பரிகாரம்:

பராசக்தியை வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரம், 6-ல் சனி, 11-ல் கேது உலவுவது சிறப்பு. நிர்வாகத் திறமை வெளிப்படும். அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நூதன பொருட்சேர்க்கை நிகழும்.

பொதுநலப் பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். ஆன்மிகவாதிகள் வளர்ச்சி காண்பார்கள். அறநிலையப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். எதிரிகள் விலகிப் போவார்கள். வாழ்க்கைத் துணையால் அனுகூலம் உண்டாகும். பங்குதாரர்களால் நலம் ஏற்படும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23, 27 (முற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, நீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 7. 8.

பரிகாரம்:

ஸ்ரீரங்கநாதர், ரங்கநாயகியை வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் புதன் 2-ல் உலவுவது சிறப்பு. சுக்கிரன், கேதுவின் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் பொருள் வரவு கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சில் கண்டிப்பும் கறாரும் இருக்கும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் உருவாகும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். பெண்களின் நிலை உயரும்.

ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், மேடைப் பேச்சாளர்களுக்கு வரவேற்பு கூடும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறை லாபம் தரும். அலைச்சல் சற்று அதிகரிக்கவே செய்யும். 3-ல் குரு, 5-ல் சனி இருப்பதால் புத்திர, புத்திரிகளின் நலனில் கவனம் தேவை. ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. நிதானம் தேவை. தலை, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வாரப் பின்பகுதியில் எதிர்ப்புகள் குறையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23, 27), 29 (பிற்பகல்).

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, வான்நீலம், மெரூன்.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்:

சுப்பிரமணியர், துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும், 3-ல் ராகுவும் உலவுவதால் சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிவரும். அதனால் அனுகூலம் ஏற்படும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உதவி புரிவார்கள். ஏற்றுமதி-இறக்குமதியால் ஆதாயம் கிடைக்கும். பொதுநலப் பணியாளர்கள் வரவேற்பு கூடும்.

கலைஞர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். தாய் நலனில் கவனம் தேவை. ஜன்ம ராசியில் சூரியன் இருப்பதால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். செவ்வாய் 12-ல் இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன் கைப்பொருளைப் பாதுகாத்துக்கொள்வதும் அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23, 27 (முற்பகல்), 29 (பிற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: திருமுருகனை வழிபடவும். முருகனுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும், 3-ல் சனியும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. தோற்றப்பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைஞர்களுக்குப் புகழோடு பொருளும் கிடைக்கும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். உழைப்புக்குரிய பயன் கிடைத்துவரும். சமுதாய நலப் பணியாளர்களுக்கு மதிப்பு உயரும்.

தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சுபிட்சம் கூடும். செந்நிறப் பொருட்கள், மின் சாதனங்கள், வெடிப் பொருட்கள், நிலபுலங்கள், கட்டிடப் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23, 27 (முற்பகல்), 29 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு,

எண்கள்: 6, 8, 9.

பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் சொல்வதும் கேட்பதும் நல்லது. நாகர் வழிபாட்டைத் தொடரவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாயும், 11-ல் சூரியனும் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் செயலில் வேகம் கூடும். எடுத்தக் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். குறுக்கீடுகள் அகலும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். அரசு சம்பந்தமான காரியங்கள் வெற்றி தரும்.

முக்கியமானவர்கள் உதவி புரிவார்கள். மேலதிகாரிகள் உங்களைப் போற்றுவார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். போட்டிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மூதாதையர் சொத்துகள் சேரும். பிள்ளைகளாலும் வாழ்க்கைத் துணைவராலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். கோபம் அடியோடு கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23, 27 (முற்பகல்), 29 (பிற்பகல்).

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, நீலம், ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 5, 6, 9.

பரிகாரம்:

குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வ நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x