Published : 13 May 2017 08:56 AM
Last Updated : 13 May 2017 08:56 AM

தி இந்து ஆனந்தஜோதியில் தொடராக வரும் மஹா அமிர்தம் புத்தகத்தை காஞ்சி ஸ்ரீவிஜயேந்திரர் வெளியிட்டார்

‘தி இந்து’வின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வெளிவரும் ‘மஹா அமிர்தம்’ பகுதியின் தொகுப்பு, புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்நூலை காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசிர்வாதத்துடன் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று வெளியிட்டார்.

‘தி இந்து’ நாளிதழின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வெளி வந்து, வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுவரும் பகுதி ‘மஹா அமிர்தம்’. இது புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி பழைய மாமல்லபுரம் சாலை துரைப்பாக்கத்தில் உள்ள சங்கரா மெட்ரிக் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

‘மஹா அமிர்தம்’ நூலை காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசிர்வாதத்துடன் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டுப் பேசும்போது, ‘‘சாந்த்ரமான அடிப்படையில் இன்று மஹா பெரியவாளின் ஜெயந்தி. இந்த நாளில் ‘மஹா அமிர்தம்’ புத்தகம் வெளிவருவது பொருத்தமாக அமைந்திருக்கிறது’’ என்றார்.

இந்தப் புத்தகம் குறித்து சங்கர மடம் வெளியிட்டுள்ள முகவுரையில் (முகம்) கூறியுள்ளதாவது:

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக விளங்கியவர் பூஜ்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமி கள். இவர் 87 ஆண்டுகள் பீடாதிபதியாக இருந்தவர். இவரை மக்கள் ‘நடமாடும் தெய்வம்’, ‘மஹாஸ்வாமிகள்’, ‘மஹாபெரி யவா’ என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்து வணங்கி வருகின்றனர்.

இவர் உலக மக்களுக்கு ஆற்றிய உரை, ‘தெய்வத்தின் குரல்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி, அனைத்து ஆன்மிக அன்பர்களாலும் ஆர்வத்துடன் படிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள ஏராளமான கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், கையடக்க வடிவிலான நூலாக, மஹா பெரியவாளின் அற்புதமான புகைப்படங்களுடன் ‘தி இந்து’ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் மஹா பெரியவாளின் பட்டினப்பிரவேசம் 1957-ல் ‘தி இந்து’ காரியாலயத்தில் இருந்து தொடங்கப்பட்டது. அவர்கள் காலத்திலேயே மஹா பெரியவாளின் உபன்யாஸங்கள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

164 பக்கங்கள் கொண்ட ‘மஹா அமிர்தம்’ நூலின் விலை ரூ.100. இதை முன்பதிவு செய்ய விரும்பு வோர் 044-33031249 என்ற எண் ணுக்கு ‘மிஸ்டுகால்’ கொடுக்கலாம். வரும் திங்கள்கிழமை முதல் கடைகளிலும் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x