Published : 04 Oct 2018 11:56 AM
Last Updated : 04 Oct 2018 11:56 AM

வார ராசி பலன் - 04-10-2018 முதல் 10-10-2018 வரை (துலாம் - மீனம்)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் பணத்தேவை இருக்கும். சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் பதற்றமும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததைவிடக் குறையக் கூடும். குடும்பத்தில் எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் சாதகமாக நடந்து முடியும். கலைத் துறையினருக்கு, சொத்துகளைப் பெறுவதில் தடைகள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். திடீர் பதற்றம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி l திசைகள்: மேற்கு, தென்மேற்கு l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் l எண்கள்: 3, 6 l பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்கள் மன நிறைவைத் தரும். எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கி விருத்தியடையும். உத்தியோகத்தில் கவனத்துடன் பழக வேண்டும். குடும்பத்தில் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போக வேண்டும். பெண்களுக்கு, சின்ன விஷயங்கள் கூட மனநிறைவு தரும்படி நடக்கும். கலைத் துறையினருக்கு, விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு, தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன் l திசைகள்: வடக்கு, வடகிழக்கு l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் l எண்கள்: 3, 9 l பரிகாரம்: செவ்வாய்க்கிழமை நவகிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லாக் காரியங்களும் வெற்றி பெறும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்துவகையிலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் இருக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரத்தில் அடுத்த நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகளின் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை மாறும். பெண்களுக்கு, காரியங்களைத் துணிச்சலாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, பயணங்களால் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறத் துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி l திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு l நிறங்கள்: மஞ்சள் l எண்கள்: 1, 3 l பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதைரியம் கூடும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் யோசித்துச் செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசிச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எதிலும் எச்சரிக்கை தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். பெண்கள் யோசித்துச் செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத் துறையினருக்கு, பாராட்டுகள் வரும். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாளாக இருந்த பிரச்சினைகள் விலகும். மாணவர்களுக்கு, திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன் l திசைகள்: தெற்கு, தென்கிழக்கு l நிறங்கள்: நீலம் l எண்கள்: 3, 6 l பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர எல்லாக் காரியங்களும் வெற்றியடையும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் அறிவுத்திறமை கூடும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதால் நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சினால் எதிலும் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. வீடு, மனை வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்துக்குக் குறைவு இருக்காது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும். குடும்ப ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் எதையும் மனம்விட்டுப் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். கலைத் துறையினருக்குப் பாதுகாப்பு அவசியம். அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன் l திசைகள்: மேற்கு, வடமேற்கு l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் l எண்கள்: 3, 9 l பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இடமாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததைவிடக் குறைவான லாபம் தரும். செலவுகள் கூடும். கடன் விவகாரங்கள், கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். குடும்பத்தினரால் இருந்தவந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியக் குறைபாடு பூர்த்தியாகும். பெண்களுக்கு, பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாகக் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறக் கூடுதல் நேரம் பாடங்களைப் படிப்பது நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன் l திசைகள்: வடக்கு, வடமேற்கு l நிறங்கள்: மஞ்சள், சிவப்பு l எண்கள்: 1, 3 l பரிகாரம்: நவக்கிரக குருவை வியாழக்கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x