Published : 01 Feb 2018 11:12 AM
Last Updated : 01 Feb 2018 11:12 AM

வேறு எதுவும் இல்லை

“என்ன மர்மம் வைத்திருக்கிறார் உன் கலையில்?” என்று இளவரசர் கேட்டார், தச்சுக் கலைஞர் செய்த மரவேலையைக் கண்டு அதிசயித்து.

“மர்மம் எதுவும் இல்லை, இளவரசே” என்றார் அந்தக் கலைஞர். “என்றாலும் அதில் ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு வேலையைத் தொடங்குகிற சமயத்தில் என் உயிர்ச்சக்தி குறையாமல் பாதுகாத்துக்கொள்கிறேன். முதலில் என் மனதை நிர்ச்சலனமாக்கிக் கொள்கிறேன். அந்த நிலையில் மூன்று நாள்; அப்போது, எனக்குக் கிடைக்கக்கூடிய எந்த லாபமும் மறந்துபோகிறது. அப்படி ஐந்து நாள்; அப்போது, எனக்குக் கிடைக்கக்கூடிய எந்தப் பரிசும் மறந்துபோகிறது. ஏழு நாள்; என் நான்கு கை கால்களும் சரீரமும் மறந்துபோகிறது.

பிறகு, அரசவை பற்றிய எந்த நினைப்பும் இல்லாமல், என் திறமை ஒருமுகப்படுகிறது; வெளிப்புறத்திலிருந்து வந்து குறுக்கிடுகிற அம்சங்கள் மறைந்துபோகின்றன... நான் மலையிலிருக்கிற ஏதோ ஒரு காட்டுக்குள் நுழைகிறேன். தகுந்த மரத்தைத் தேடுகிறேன். தேவைப்படுகிற உருவம் அதில் இருக்கிறது. அந்த உருவத்துக்குப் பிறகு கலைப்பூச்சுக் கொடுத்துக்கொள்ளலாம். முடிந்த நிலையில் இருக்கிற உருவத்தை என் மனக்கண்ணால் காண்கிறேன்; பிறகு, வேலையைத் தொடங்குகிறேன். அதைத் தவிர வேறு எதுவும் இல்லை.”

தா வோ தே ஜிங் | லாவோட்சு

க்ரியா பதிப்பகம் | தமிழில்: சி. மணி

புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம், 17ஆவது

கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,

சென்னை - 600 041

தொலைபேசி: +91-44-4202 0283

விலை: ரூ. 125

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x