Published : 04 Nov 2017 12:19 PM
Last Updated : 04 Nov 2017 12:19 PM

வார ராசிபலன் 02/11/2017 முதல் 08/11/2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியில் இருக்கிறார். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் திறமை அதிகரிக்கும். எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் தேக்க நிலை மாறும். வழக்குகளில் தொய்வு நீங்கி வேகம் எடுக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறலாம். மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வாழ்க்கைத்துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. அரசியல்வாதிகள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். சுபச் செலவுகள்  ஏற்படும். வெற்றி கிடைப்பதில் இருந்த தடை தாமதம் நீங்கும். பணவரத்து இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகளில் இருந்து வந்த சோதனைகள் மாறும். சொத்து விஷயங்களில் தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருவாய்க்குக் குறையிருக்காது. போட்டிகள் பற்றிய கவலையை விட்டு விட்டு தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். உறவினர்கள்  ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்குத் துணிச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். மாணவர்கள் சக மாணவர்களிடம் சகஜமாகப் பேசி பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: முருகனைத் தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காகப் பணம் செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்கு வன்மை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். மனச்சோர்வு அகலும். உங்களிடமிருக்கும் நிதானம் அதிகரிக்கும்.  தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும்.

பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். பெண்கள் தாராளமாகச் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் முன் ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அரசியல்வாதிகள் முக்கிய நபர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். ராசிநாதன் சனியின் சஞ்சாரத்தால் முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டீர்கள். வரவைப் போலவே செலவும் இருக்கும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். திடீர்க் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குக் கூடுதல் வேலைச்சுமை இருக்கும்.

மேலிடம் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் நீங்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம், அடர் சிவப்பு | எண்கள்: 5, 6

பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகமாகும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். உடமைகளைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஏற்படும் பணத்தேவையைச் சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான திட்டங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மேலிடத்திலிருந்து கனிவான உபசரிப்பைப் பெறுவீர்கள்.

குடும்பத்தினரால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் அகலும். எந்த விஷயத்தையும் லாவகமாகக் கையாண்டு சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். பெண்கள் பயணங்களின் போது தங்கள் பொருட்களில் கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்குப் போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்குக் கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மாணவர்களுக்குத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், வெள்ளை | எண்கள்: 5, 6

பரிகாரம்: சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.  எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.

 

மீன ராசி வாசகர்களே 

இந்த வாரம் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்தால் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்ளவும். அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக  முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். வெளியூர்ப்  பயணம் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள்  ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பெண்கள் கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கலைத்துறையினர்  புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் எடுக்கும் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். மாணவர்கள் கவனத்துடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களைப் படிப்பது நல்லது.  

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x