Last Updated : 07 Nov, 2017 01:35 PM

 

Published : 07 Nov 2017 01:35 PM
Last Updated : 07 Nov 2017 01:35 PM

நவகன்னியரை வணங்குவோம்!

கோயில் நகரம் என்று கும்பகோணத்துக்கு பெருமை உண்டு. அதுமட்டுமா.. . பிரசித்தி பெற்ற மகாமகக் குளம் கொண்ட நகரமும் இதுவே. கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடகரையில் அமைந்துள்ளது ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம். நவகன்னியர் வழிபட்ட ஆலயம். பிரளயத்தின் போது, ஆன்மாக்களை ஆட்கொண்டு தனக்குள் ஐக்கியப்படுத்தி, இறைவன் அருள்பாலித்த திருத்தலம் இது என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்! அம்பாள்- ஸ்ரீவிசாலாட்சி; வினைகள் யாவற்றையும் நீக்கியருளும் தேவி. வரப்பிரசாதி.

கோயிலின் வடக்கு மூலையில் ஸ்ரீராமபிரான் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியைத் தரிசிக்கலாம். உயர்ந்த பாணத்துடன் காட்சிதரும் இந்த மகாலிங்கம் நாளுக்குநாள் வளர்வதாக நம்பிக்கை. இந்தக் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் நவகன்னியரும் மிகுந்த சக்தி மிக்கவர்கள். சாந்நித்தியம் கொண்டவர்கள். இவர்களை வழிபடுவதால், சகல தோஷங்களும் விலகும்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், அம்பாளுக்கும் நவகன்னியருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த நாளில்... மகாமகக் குளத்தினருகில் குடியிருந்து அருள்பாலிக்கும் நவகன்னியரையும் செந்நிற மலர்கள் சார்த்தி கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். மங்கல காரியங்கள் இல்லத்தில் நிகழும். காரியத் தடைகள் யாவும் அகலும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x