Last Updated : 07 Nov, 2017 10:54 AM

 

Published : 07 Nov 2017 10:54 AM
Last Updated : 07 Nov 2017 10:54 AM

அற்புதமான நாள்... ஆலயம் தொழுவோம்!

செவ்வாய்க் கிழமை எப்போதுமே அருமையான தினமாகப் போற்றப்படுகிறது. வழிபடுவதற்கும் வணங்குவதற்கும் உரிய நாளாக பார்க்கப்படுகிறது. இன்று முக்கனிகள் போல், முப்பெரும் விஷயங்கள் கலந்து வந்திருக்கின்றன.

செவ்வாய்க்கிழமை, எப்போதுமே சக்திதேவிக்கு உரிய நாள். இந்த நாளில் அம்பிகையைத் தொழுவதும் அவளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவதும் மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். மங்கல காரியங்களை தடையின்றி நிகழ்த்தும் என்பது ஐதீகம். அதேபோல், மாலை 3 முதல் 4.30 வரையிலான ராகு கால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் விலகுவர். தீய சக்திகள் அண்டாது நம்மைக் காத்தருள்வாள் துர்கை.

அடுத்து, செவ்வாய்க்கு நாயகன்... முருகப் பெருமான். இந்த நாளில், கந்தக் கடவுளை வணங்கி, செவ்வரளி மாலையோ செந்நிற் மலர்களோ அணிவித்து வழிபட்டால், கந்தவேள்... நம் கவலைகளையெல்லாம் விரட்டி, நல்லருள் செய்வான். வினைகளையெல்லாம் தீர்த்து வைத்து வேல் கொண்டு காப்பான்!

மூன்றாவதாக, விநாயக வழிபாடு. இன்று சங்கடஹர சதுர்த்தி. இந்த நல்ல நாளில், மாலையில் கணபதியைத்தொழுவது ரொம்பவே சிறப்பு. அருகம்புல் மாலை வழங்கலாம். எருக்கம்பூ மாலை சார்த்தலாம். நம் விக்னங்களையெல்லாம் களைவார் விக்ன விநாயகப் பெருமான்!

ஆக இந்த அற்புத நாளில் ஆலயம் தொழுவோம். இயலாதோர்க்கு நம்மால் முடிந்த அன்னதானம் செய்வோம். இறையருள் பெற்று இனிதே வாழ்வோம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x