Last Updated : 17 Nov, 2017 05:26 PM

 

Published : 17 Nov 2017 05:26 PM
Last Updated : 17 Nov 2017 05:26 PM

தாலி பாக்கியம் தரும் திருமங்கலக்குடி!

கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் பயணித்தால், திருமங்கலக்குடி எனும் கிராமத்தை அடையலாம். இங்கே உள்ள ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீபிராணநாதேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீமங்களாம்பிகை.

கோயில் நகரம் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சின்னச் சின்ன ஊர்களிலும் கூட, ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்துமே சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள்! புராணத் தொடர்புகள் கொண்ட, புராதனப் பெருமைகள் மிக்க கோயில்கள்.

மங்கலக்குடி என்பது ஊரின் பெயர். இங்கே அம்பாளின் திருநாமம் மங்களாம்பிகை. இங்கே உள்ள கணபதியின் பெயர் மங்கள விநாயகர், அதுமட்டுமா? மங்கள விமானம், மங்கல தீர்த்தம் எனப் மங்கலப் பெருமைகள் கொண்ட இந்தத் தலத்தை, பஞ்ச மங்கலத் தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்!

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தேவாரம் பாடிய திருத்தலம் இது. கணவருக்கு அடிக்கடி உடல் நலனில் கோளாறு இருந்தாலோ, படுத்த படுக்கையாக இருந்தாலோ... அம்பாளுக்கு மாங்கல்ய சரடு சார்த்தி வழிபடுவது இங்கே பிரசித்தம்.

இந்த மாங்கல்ய சரடை பிரசாதமாக எடுத்துச் சென்றால், மாங்கல்ய பலம் பெருகும், தாலி பாக்கியம் நிலைக்கும், கணவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வார் என்பது ஐதீகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x