Published : 14 Feb 2015 14:34 pm

Updated : 14 Feb 2015 14:38 pm

 

Published : 14 Feb 2015 02:34 PM
Last Updated : 14 Feb 2015 02:38 PM

டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் கேஜ்ரிவால்

டெல்லி மாநில முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக இன்று காலை அவருக்கு டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, அர்விந்த் கேஜ்ரிவால் தனது அமைச்சரவை சகாக்களுடன் டெல்லி தலைமைச் செயலகத்தை அடைந்தார். அங்கு தலைமைச் செயலக அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர், அவர் முறைப்படி முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர், அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

டெல்லி மாநில முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால் பொறுப்பேற்பு

You May Like

More From This Category

More From this Author