Last Updated : 20 Mar, 2018 09:27 AM

 

Published : 20 Mar 2018 09:27 AM
Last Updated : 20 Mar 2018 09:27 AM

வீட்டு விவசாயம் போதிக்கும் சேலத்து அல்லி

‘‘அ

டி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு’’ என்றார் நம்மாழ்வார், ‘‘காட்டில் நெடுநெடுவென வளரும் செடி, கொடி, மரங்களின் வேர் காடு செழிக்கவும் நடுவில் இருக்கும் தண்டுகள் மாடுகளின் தீவனத்துக்கும் நுனியில் விளையும் காய்கறி, பழங்கள் நம் வீட்டு சமையலுக்கும் பயன்படுத்துவதன் மூலம் காடு வளம் பெறும் என்பதைத்தான் நயமாகச் சொன்னார் நம்மாழ்வார்.

மரத்தை வேரோடு சாய்த்து காட்டின் தத்ரூபத்தை மாற்றிட முனையும் ஒவ்வொருவரும் இயற்கையின் எதிரிகளே. தற்சார்பு வாழ்வியல் முறையை முன்னெடுத்து இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை ஊர் ஊராய் சென்று சேர்க்கும் அரும் பணியாற்றினார் நாம்மாழ்வார்.

அவரின் கோட்பாட்டில் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாய முறையில் காய்கறி, கீரை விளைவிக்கும் வீட்டுத் தோட்டத்தை உருவாக்கியுள்ளார் சேலத்தைச் சேர்ந்த அல்லி.

சேலம் குரங்குச்சாவடி பகுதியில் வசிக்கும் அல்லி, விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பூச்சிக் கொல்லி மருந்துகள் மனித உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் உறிஞ்சும் பயங்கரத்தை நம்மாழ்வாரின் பேச்சால் உணர்ந்த, அல்லியின் குடும்பம் முற்றிலும் இயற்கை விவசாயத்துக்கு திரும்பியது.

தான் மாறியது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள நாலு பேரையாவது இயற்கை விவசாயத்துக்கு கொண்டு வர முடிவு செய் தார். இதற்காக பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளுக்குச் சென்று இயற்கை விவசாயத்தின் மகத்துவம் குறித்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அத்துடன் வீடுகளில் காய்கறி, பழம், கீரை வகைகளை பயிரிட்டு அவர்களின் சுய உணவுத் தேடலை பூர்த்தி செய்ய வழிகாட்டினார். இவரால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளின் வளாகம் இயற்கை விவசாயத்துக்கு மாறியது.

“உணவில் ஊடுருவி பாயும் நஞ்சு ரசாயனத்தை தவிர்க்க வேண்டும் என்ற சிந்தனையே இயற்கை விவசாயம் தழைக்க முக்கியமானது. வீட்டு மாடிகளில், சமையலறை, முன்புற காலி இடங்களில் வேண் டிய அளவு வீட்டுத் தோட்டத்தை அமைக்கலாம்” என்கிறார் இந்த சேலத்து அல்லி.

எந்தக் காட்டுக்கும் யாரும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில்லை. காடு தானாகவே உருவாவது. 100 அடி ஆழ கிணற்றில் ஏற்றம் இரைத்து வயலுக்கு நீர் பாய்ச்சிய காலம் மாறி, ஆயிரம் அடி ஆழம் போர் வெல் போட்டு, பாசனம் செய்யும் சோதனை காலத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அவசியமான அறிவியல் தொழில்நுட்பம் கூட அபாயகரத்துக்கும் துணைபோகிறது. இயற்கை பேரழிவுக்கு வித்திடும் எவற்றையும் புறந்தள்ள வேண்டும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x