Published : 14 Mar 2018 10:48 AM
Last Updated : 14 Mar 2018 10:48 AM

மயான பணியே மகத்தான பணி: ஒரு திருநங்கையின் திருப்தி

ல துறைகளிலும் சாதிக்கும் நிலைக்கு பெண்கள் உயர்ந்திருப்பதை கொண்டாடும் அதே அளவுக்கு திருநங்கைகளின் சாதனைக ளும் கொண்டாடப்பட வேண்டியதே. அப்படி ஒரு சாதனையாளராகத்தான் தெரிகிறார் கோவை அட்சயா.

சிறு வயதில் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆசைப்பட்டவருக்கு இப்போது மயானத்தில் வேலை. அர்ப்பணிப்புமிக்க பணி என்பதில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. சடலங்களை புதைப்பதும் எரிப்பது மான வேலையை விரும்பிச் செய்கிறார். தனக்கு திருப்தி கிடைப்பதாகக் கூறுகிறார்.

கோவை சொக்கம்புதூரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த அட்சயா படித்ததெல் லாம் சீரநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளியில். மெல்ல தன் னை பெண்ணாக உணர்ந்த தருணத்தில் சக மாணவர்களின் கேலி கிண்டலால் 9-ம் வகுப் போடு படிப்பு நின்றுபோனது. பின்னர் வேலைக்குச் சென்ற இடத்திலும் இதே கேலி, கிண்டல்கள், பாலியல் சீண்டல்கள் தொடர வேலையை விட்டுவிட்டு வீடு வந்தார்.

சும்மா இருப்பதும் குடும்பத்துக்குள் அவர் மீது அதிருப்தி யை ஏற்படுத்த, மீண்டும் வேலை தேடி கிளம்பினார். திருநங்கை என்ற ஒற்றை காரணமே அவருக்கு வேலை கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது. விரக்தியில் இருந்தவரை அரவணைத்தார் அட்சயாவின் பெரியம்மா வைரமணி. தற்கொலை வரை சென்றவரை காப்பாற்றி அவர்தான் மீட்டு வந்தார். அட்சாயவின் வாழ்க்கை திசையை மாற்றியவரும் இவர்தான்.

அதுபற்றி தொடர்கிறார் அட்சயா, “பெரியம்மா வைரமணி எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக் கற சுடுகாட்டுல வெட்டியான் வேலை செய்றாங்க. கூடமாட ஒத்தாசைக்கு கூப்பிட்டாங்க. அவங்களோட வந்துட்டேன். ஆரம்பத்துல சிலர் கேலி செஞ்சாங்க. ஆனா, இப்ப அந்த மாதிரி யாரும் பன்றதில்ல.

குழி வெட்டறது, பொணத்த எரிக்கறதுன்னு எல்லா வேலை யும் செய்வேன். ஒரு குழி வெட்ட 5 மணி நேரம் ஆகும். மழைக் காலத்துல இன்னும் அதிக நேரமாகும். அதேமாதிரி, வெறகு அடுக்கி எரிப்பதும் உண்டு. ஒரு பொணம் எரிஞ்சி முடிக்க 7 மணி நேரமாகும். எரிஞ்சி முடிக்கற வரைக்கும் கூடவே இருப்பேன். சில நேரத்தில நைட்டு 9 மணிக் குக் கூட பொணங்க வரும். அப்போ விடியற வரைக்கும் சுடுகாட்டுலேயே இருக்க வேண்டி வரும். தனியாகவே இருந்திருக்கிறேன். எந்த பயமும் இல்லை.

இந்த வேலைக்கு வந்த பிற கும் சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். என்னை பாதுகாத்துக் கொண்டேன்.

இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு பொணத்தை அடக் கம் செய்ய ரூ.400 கிடைக்குது. இனிமே சாகுற வரைக்கும் இது தான் எனக்கு வேலை. நிறைய பேர் அக்கான்னு கூப்பிடறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஆதரவற்றவங்க இறந்தா இலவசமாகவே புதைப்போம். ஆம்பளயோ, பொம்பளயோ, திருநங்கையோ பேதம் பாக்காம அங்கீகாரம் கொடுங்க. அதுபோதும்' என்கிறார் அட்சயா.

மயானத்தில் வெட்டியான் வேலை பார்க்கும் ஒரே திருநங்கை இவர்தான் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள் சுடுகாட் டில் பணி செய்ய ஆண்களே தயங்கும் நிலையில், தைரிய மாக ஒரு பெண்ணாக இருந்து சாதித்த அட்யாவின் பெரியம்மா வைரமணியை பாராட்டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x