Last Updated : 03 Apr, 2018 09:38 AM

 

Published : 03 Apr 2018 09:38 AM
Last Updated : 03 Apr 2018 09:38 AM

நிஜத்தில் ஒரு ‘சாட்டை’ நாயகி: அரசு பள்ளிகளை காக்கும் ஆசிரியை

‘சா

ட்டை‘ திரைப்படத்தில் ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் வரும் நடிகர் சமுத்திரகனி கதைப்படி, தான் பணியில் இருக்கும் பள்ளியை சிறப்பிடத்துக்கு முன்னேற்றுவார். பின்னர் அதேபோன்ற மற்றொரு பள்ளியை அதே நிலைக்கு உயர்த்த பணி மாறுதல் வாங்கிச் செல்வதுடன் படம் முடியும். அதேபோன்ற ‘சாட்டை‘ நாயகிதான் ஊட்டியைச் சேர்ந்த தலைமை ஆசிரியை ஷோபா.

ஒரு பக்கம் போதிய மாணவர்கள் சேரவில் லை எனக் கூறி, அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி மூடவிருக்கும் பள்ளிகளை பாதுகாக்கிறார் இந்த ஷோபா. எந்தெந்த பள்ளிகளுக்குச் செல்கிறாரோ அந்த பள்ளியை உயர்த்துகிறார். இதுவரை 4 பள்ளிகள் இவரால் மூடு விழா வில் இருந்து தப்பித்துள்ளன.

ஊட்டி அருகே உள்ள சோளூர்தான் ஷோபாவின் சொந்த ஊர். ஆங்கிலம் மற் றும் தமிழில் பட்டம் பெற்று, 1988-ல் கூடலூர் அரசு பள்ளியில் ஆசிரியை பணிக்குச் சேர்ந்தார். பின்னர் 2003-ல் பதவி உயர்வு பெற்று, தலைக்குந்தா பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை ஆனார்.

சுடுகாட்டுக்கு அருகே இருந்ததால் சடலங்கள் எரியூட்டும்போதெல்லாம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் படிப்பு பாதித்து, மாணவர் சேர்க்கையும் குறைந்தது. படிப்படி யாக பள்ளி மூடும் நிலைக்கு வந்தது.

பிரச்சினையை உணர்ந்த ஷோபா, உடனே பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியில் இறங்கினார். பள்ளியின் உட்புறம், வெளிப்புறத் தை தூய்மையாக்கியதில் புது பொலிவு பெற் றது. மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது.

இப்படித்தான் டி.ஆர்.பஜார் மற்றும் கிளென் மார்க்கன் கேம்ப் நடுநிலைப் பள்ளிகள், இந்திரா நகர் தொடக்கப் பள்ளி ஆகியவற்றை மூடுவதில் இருந்து காப்பாற்றினார்.

இப்போது ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருக்கிறார். 2015-ல் இவர் பொறுப்பேற்றபோது மாணவர் எண்ணிக்கை வெறும் 18. மூட வேண்டிய நிலையில் பள்ளி இருந்தது. ஒரே ஆண்டில் 18-ஐ 138-ஆக உயர்த்தினார். அது பற்றி அவர் பகிர்ந்தபோது,

“பெற்றோர்களிடம் வீட்டுக்கே சென்று பேசினோம். தொடர் முயற்சியால் பிள்ளைகளை எங்களிடம் அனுப்பினர். தனியார் பள்ளிகளைப் போல ஸ்மார்ட் கிளாஸ், ஆர்ஓ பிளாண்ட் வசதிகளை ஏற்படுத்தினோம். பெற்றோருக்கு ஏக மகிழ்ச்சி. மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதற்காக சக ஆசிரியர்களும் ஒத்துழைக்கின்றனர்” என பூரித்தார்.

இதைத்தவிர பள்ளியில் மூலி கை, ரோஜா, காய்கனி தோட்டங்கள், மண்புழு உரம் தயாரிப்புக் கூடம் அமைத்துள்ளனர். இதனால் பசுமையும் தூய்மையு மாய் இருக்கிறது பள்ளி. மேலும் யோகா, கராத்தே, கர்நாடக இசை, ஆங்கிலம் பேச பயிற்சியுடன் மாணவர்களுக்கு தினமும் ஊட்டச்சத்து பாலும் கிடைக்கிறது. இத்தனை ஹைடெக் வசதிகளை ஏற்படுத்தியதிற்காக, புதுமை பள்ளி விருதுக்கு இந்தப் பள்ளியின் பெயர் பரிந்துரைக்கப்பட் டுள்ளது.

2015-16 ஆண்டு நல்லாசிரியர் விருது, எம்.எஸ்.சுவாமிநாதனின் சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் சுற்றுச்சூழல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் ஷோபாவால் கவுரம் அடைந்துள்ளன. தொடரட்டும் பணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x