Published : 10 Feb 2018 07:31 AM
Last Updated : 10 Feb 2018 07:31 AM

திண்டுக்கல்லில் ஆதரவின்றி தவித்த பரிதாபம் தாயை இழந்த குழந்தைகள் மீண்டும் படிக்க ஆசை: சமூக பாதுகாப்பு துறை நடவடிக்கை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்த தாயை அடக் கம் செய்ய வழியின்றி தவித்த சிறுவன், தற்போது விடுபட்ட படிப்பை தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்கு ஏற் பாடு செய்வதாக சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பூத்தாம்பட்டி அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த காளியப்பன் - விஜயா தம்பதியின் மகன்கள் மோகன்ராஜ் (15), வேல்முருகன் (14), மகள் காளீஸ்வரி (9).

காளியப்பன் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயாவும் 2 நாட்களுக்கு முன்பு இறந்தார். அவரது இறுதிச் சடங்குக்குக்கூட பணமின்றி, பரிதவித்து நின்ற குழந்தைகளுக்கு, மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும், மருத்துவமனை நிர்வாகமும் உதவி செய்தது. கேரளாவில் கூலிவேலை பார்க்கும் அவர்களது சித்தப்பா முருகன் வந்ததும், விஜயாவின் உடல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்தக் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியானது பற்றிய செய்தி 9-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் பெரிய அளவில் வெளியானது. இந்நிலையில், இச்செய்தி எதிரொலியாக, ஆதரவை இழந்து நிற்கும் சிறுவர்களை, தமிழக சமூக பாதுகாப்பு துறையின் குழந்தைகள் நலக்குழு நேற்று அழைத்து விசாரித்தது. குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மீனாட்சி, குழந்தைகள் நலக்குழு தலைவர் கணேசன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் தனித்தனியே சிறுவர்களின் விருப்பத்தைக் கேட்டறிந் தனர்.

‘தி இந்து’விடம் சிறுவன் மோகன்ராஜ் கூறியபோது, ‘‘குடும்பத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாததால், பேக் கரி கடையில் வேலைக்கு சென்றேன். எனக்கு மீண்டும் படிக்க ஆசையாக இருக்கிறது என்று அதிகாரிகளிடம் சொன்னேன். படிக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். என் தம்பி வேல்முருகன், தங்கை காளீஸ்வரியிடமும் விசாரித்தார்கள். 3 பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தோம். அதற்கும் ஏற்பாடு செய்வதாக கூறியிருக்கிறார்கள்’’ என்றார்.

சிறுவர்களின் சித்தப்பா முருகனின் மனைவி மகேஸ்வரி கூறியபோது, ‘‘இனி, அந்த 3 குழந்தைகளுக்கு நாங்கள்தான் எல்லாம்’’ என்று கலங்கியபடியே கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x