Published : 15 Feb 2018 10:16 AM
Last Updated : 15 Feb 2018 10:16 AM

காகிதத்தில் கலைவண்ணம் கண்டார்

ல்லிலே மட்டுமல்ல... காகிதத்திலும் பல கலைவண்ணம் காண்கின்றனர். இந்த காகிதக் கலைக்கு ‘ஓரிகாமி’ என பெயர். இந்தக் கலையை தமிழகம் முழுவதும் சென்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத் தருகிறார் தியாக சேகர் என்ற 35 வயது இளைஞர். கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் இவரிடம் காகிதக் கலையை கற்றுள்ளனர்.

தஞ்சை கபிஸ்தலம்தான் தியாக சேகரின் சொந்த ஊர். 5-ம் வகுப்பு படிக்கும்போதே காகிதத்தை மடித்து, வெட்டி, ஒட்டி ஏதாவது வடிவம் செய்து சக மாணவர்களை கவர்வார். இப்படி பள்ளிப் பருவத்தில் உருவான காகிதக் கலை ஆர்வம் இவரை சிறந்த காகிதக் கலை (ஓரிகாமி) கலைஞராக உருவாக்கியுள்ளது.

தனது அனுபங்கள் குறித்து தியாக சேகர் கூறியதாவது:

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன் பல்வேறு கலைகளை கற்கவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால், எனக்குத் தெரிந்த காகிதக் கலையை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சொல்லிக்கொடுக்க முடிவு செய்தேன்.

உலகில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காகிதக் கலை வடிவங்கள் உருவாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு பிறருக்கும் கற்றுத்தர வேண்டும் என நினைக்கிறேன்.

ஜப்பானியர்கள் கண்டுபிடித்த ‘ஓரிகாமி’ எனும் காகிதக் கலை ஒருவரை உளவியல் ரீதியாக பண்படுத்தும். இரண்டு கைகளாலும் வேலை செய்யக் கூடிய கலை இது. இதனால் மூளையின் வலது மற்றும் இடது பகுதிகள் இரண்டின் செயல்திறன் கூடும். இக்கலை ஒரு விஷயத்தை உற்று நோக்கும் தன்மையை மேம்படுத்தி, கண்டுபிடிப்பு ஆர்வத்தை தூண்டும் என கூறும் தியாக சேகர், ‘ஓரிகாமி’ கலையின் தோற்றம், வரலாறு, பல்வேறு காகித வடிவங்களை உருவாக்கும் செயல் விளக்கம் குறித்து தமிழில் ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x