Last Updated : 20 Feb, 2018 08:26 AM

 

Published : 20 Feb 2018 08:26 AM
Last Updated : 20 Feb 2018 08:26 AM

அன்ஸர் மாஸ்டர்: கிராமப்புற இளைஞர்களின் ஏணி

வி

ழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் வடபாளை கிராமத்தைச் சேர்ந்தவர் சுலைமான். பாய் நெசவு தொழிலாளி. இவரது மகன் அன்ஸர். குறைந்த வருவாயிலும் அன்ஸரை பட்டப்படிப்பு படிக்க வைத்தார்.

உழைப்பின் பலனாக கடந்த 2014-ல் சென்னை மாநகர காவல் துறையில் காவலர் பணி கிடைத்தது. தற்போது கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் வாசம். வறுமையில் படித்து காவலர் பணிக்கு வந்தவர், வேலைவாய்ப்புகளை பற்றி தெரியாத கிராமப்புற இளைஞர்களை மேம்படுத்த திட்டமிட்டு இப்போதும் உழைக்கிறார்.

இதுகுறித்து, அன்ஸர் நம்மிடம் கூறும்போது, “கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புகளை பெறுவதற் கான உடற்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு பயிற்சிகளை இலவசமாக அளிக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழக காவல்துறையில் 10 பேர், மத்திய காவல் பணியில் 2 பேர், சிஆர்பிஎப்-ல் 16 பேர், ராணுவத்தில் 4 பேர் என இங்கு பயிற்சி பெற்ற 32 பேருக்கு வேலை கிடைத்துள்ளது” என்கிறார் பெருமையுடன்.

அன்ஸரின் தன்னலமற்ற சேவை, கிராமப்புற இளைஞர்களை உயர்த்தி விடும் ஏணியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x