Last Updated : 12 Oct, 2015 11:21 AM

 

Published : 12 Oct 2015 11:21 AM
Last Updated : 12 Oct 2015 11:21 AM

தினையரிசி இனிப்பு பொங்கல்

என்னென்ன தேவை?

தினையரிசி - கால் கப்

பாசிப் பருப்பு - இரண்டரை டேபிள் ஸ்பூன்

பால் - 200 மி.லி.

வெல்லம் - அரை கப்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

கிராம்பு - 2

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

முந்திரி - 10

திராட்சை - 20

எப்படிச் செய்வது?

வெல்லத்தைக் கரைய விட்டு வடிகட்டி, குழகுழப்பு பதம் வரும்வரை கொதிக்க விடுங்கள். தினையரிசி, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து தண்ணீர், பால் சேர்த்துக் குழைய வேக விடுங்கள். வெந்ததும் பாகை ஊற்றிக் கிளறுங்கள். நெய் விட்டு குறைவான தீயில் அடி பிடிக்காமல் கிளறுங்கள்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சை கிராம்பு சேர்த்து வறுத்தெடுங்கள். அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து பொங்கல் கலவையில் சேர்த்துக் கிளறுங்கள். ஏலக்காய்ப் பொடி கலந்து இறக்கிவையுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x