

என்னென்ன தேவை?
கொத்துக் கறி – கால் கிலோ
இட்லி மாவு – 3 கப்
வெங்காயம் – 2
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
கரம் மசாலா, மிளகாய்த் தூள் – தலா ஒரு டீஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை,மல்லித்தழை - சிறிதளவு
கடுகு, உளுந்து
– தலா அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல், புதினா - சிறிதளவு
நல்லெண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கொத்துக்கறியை நன்றாக அலசிப் பிழிந்தெடுத்து குக்கரில் போட்டு அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நான்கு விசில் விட்டு இறக்கவும். தண்ணீர் ஊற்றக் கூடாது.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். அதனுடன் தயிர், கரம்மசாலாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்குங்கள். வேகவைத்த கறியை அதில் சேர்த்து, குறைந்த தீயில் சிறிது நேரம் கிளறி, கெட்டியானவுடன் இறக்கிவையுங்கள்.
இட்லித் தட்டில் அரைக் கரண்டி அளவுக்கு இட்லி மாவை ஊற்றி அதன் மேல் சிறிதளவு கொத்துக் கறியை வைத்து அதன் மீது மீண்டும் இட்லி மாவை ஊற்றி வேகவையுங்கள். வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டுத் தாளியுங்கள். அதில் தேங்காய்த் துருவல், புதினா, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து வதக்கி, இட்லி மீது தூவிப் பரிமாறுங்கள். அசைவம் விரும்பாதவர்கள், கொத்துக்கறிக்குப் பதிலாகக் காய்கறிகளை வதக்கிச் சேர்த்துச் செய்யலாம்.
ராஜபுஷ்பா