Last Updated : 29 Oct, 2017 12:35 PM

Published : 29 Oct 2017 12:35 PM
Last Updated : 29 Oct 2017 12:35 PM

பலம் தரும் பேரீச்சை: சாலட்

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய பேரீச்சை - அரை கப்

கேரட், மாங்காய் - தலா அரை கப்

பெரிய வெங்காயம் - அரை கப்

தக்காளி - அரை கப்

வெள்ளரிப் பிஞ்சு - அரை கப்

பீட்ரூட் துருவியது - ஒரு டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை - கால் கப்

புதினா - கால் கப்

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

புளிக்காத தயிர் - ஒரு கப்

சாட் மசாலா - அரை டீஸ்பூன்

மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பீட்ரூட் துருவலைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை ஒரு கிண்ணத்தில் வைத்து மேலே பீட்ரூட்டைத் தூவிப் பரிமாறுங்கள்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x