Published : 28 Nov 2023 11:34 AM
Last Updated : 28 Nov 2023 11:34 AM

சித்தார்த்தின் ‘சித்தா’ ஓடிடியில் வெளியீடு

சென்னை: நடிகர் சித்தார்த் நடிப்பில் திரையரங்குகளில் வரவேற்பை பெற்ற ‘சித்தா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்தது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த அழுத்தமான கதைகளத்தை கொண்டிருந்த இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. ரூ.5 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.25 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி தற்போது காணக்கிடைக்கிறது. படத்தை இந்தி தவிர்த்து, தென்னிந்திய மொழிகளிலும் காண முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x