Published : 16 Sep 2017 11:33 AM
Last Updated : 16 Sep 2017 11:33 AM

‘தி இந்து’ தமிழ்: பத்தி எழுத்தின் தனித்துவம் - ரவிக்குமார்

ரவிக்குமார், எழுத்தாளர், விசிக பொதுச்செயலாளர்.

ஒரு தமிழ் நாளேடு அதில் வெளியாகும் கட்டுரைகளுக்காகப் படிக்கப்படுகிறதென்றால் அது ‘தி இந்து’தான்.

‘தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றிய புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் வில்லியம் சஃபைர் புதுவிதமான எழுத்து முறையை அறிமுகப்படுத்தினார். செய்தியின் புதுமையையும் கருத்து கூறுவதையும் இணைத்து அவர் உருவாக்கிய அந்த எழுத்து முறையை ‘கருத்துடன் கூடிய செய்தி’ என அவர் அழைத்தார்.

‘உங்கள் பத்தியில் அதுவரை அறியப்படாத ஒரு உண்மையை நீங்கள் பொதித்துத் தருவீர்களெனில், நீங்கள் அதை மக்கள் விரும்பிப் படிக்குமாறு செய்வதோடு அதற்கு அவர்கள் எதிர்வினையாற்றும்படியும் செய்ய முடியும்’ என்று வில்லியம் சஃபைர் குறிப்பிட்டார். இத்தகைய கூறுகளை ‘தி இந்து’ வின் பல பத்திக் கட்டுரைகளில் நான் பார்க்கிறேன்.

துதி பாடுதலும் வெறுப்பும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அரசியலைப் போலவே, தமிழ் இலக்கியச் சூழலிலும் இவை மிகப் பெரிய சீரழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதை மாற்றுவதற்கு ‘சிறியோரை இகழ்தல் இலமே’ என்பதைக் கடைப்பிடிப்பது மட்டும் போதாது, ‘பெரியோரை வியத்தலும் இலமே’ என்ற நிலைப்பாட்டை யும் ‘தி இந்து’ மேற்கொள்ள வேண்டும்.

‘டைம் லிட்ரரி சப்ளிமெண்ட்’ போல ஒவ்வொரு வாரமும் இலக் கியத்துக்கான ஒரு இணைப்பை வழங்கலாம். அதில் இலக்கிய விமர்சனங்கள், மதிப்புரைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றோடு கவிதை, சிறுகதை முதலான படைப்புகளையும் வெளியிடலாம். வெகுசன எழுத்தாளர்களே இலக்கியத் தரத்தை நிர்ணயிக்கக்கூடியவர்களாக மாறியுள்ள இன்றைய சூழலில் சங்க காலத்திலிருந்து தொடரும் தமிழ் இலக்கிய மரபின் தீவிரத்தையும் தரத்தை யும் பாதுகாக்க இது உதவும்.

‘தி இந்து’வின் தனித்துவமான இதழியல் பயணம் சமரசமின்றித் தொடர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x