Published : 16 Sep 2017 11:48 AM
Last Updated : 16 Sep 2017 11:48 AM

‘தி இந்து’ தமிழ் நம்பிக்கை தரும் சாதனைகள்… :திருப்பூர் கிருஷ்ணன்

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

திருப்பூர் கிருஷ்ணன், ஆசிரியர், அமுதசுரபி மாத இதழ்.

நாளிதழே ஆனாலும் வார இதழின் அம்சங்களையும் இணைத்துக்கொண்டு வெளிவருவது ‘தி இந்து’வின் சிறப்பு. ஆன்மிக ஜோதி இணைப்பில் இந்து மதத்தை மட்டுமல்லாமல் கிறிஸ்துவ, முகமதிய மதங்களையும் சேர்த்துக்கொண்டு அந்த மதங்கள் தொடர்பான நன்னெறிக் கதைகளையும் வெளியிடுவதைப் பாராட்ட வேண்டும். தற்கால இலக்கியத்துக்குக் கூடுதல் இடம்கொடுப்பது வரவேற்கத் தக்கது. இலக்கியத்தின் எல்லாப் போக்குகளுக்கும் உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும். பழந்தமிழ் இலக்கியத்துக்கு இன்னும் அதிக இடம் வழங்கப்பட வேண்டும். கல்வெட்டியல், நாணயவியல் போன்ற துறைகளும் அவ்வப்போது கெளரவிக்கப்பட வேண்டும். இப்போது செய்துள்ள சாதனைகளாலேயே இன்னும் அதிக சாதனைகளை ‘தி இந்து’ செய்ய வேண்டும் எனத் தமிழுலகம் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பு வீண்போகாது என நம்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x