Published : 16 Sep 2017 12:27 PM
Last Updated : 16 Sep 2017 12:27 PM

குறை சொல்ல ஏதுமில்லை: கொடிக்கால் ஷேக் அப்துல்லா

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கொடிக்கால் ஷேக் அப்துல்லா

நம் நாட்டின் அனைத்துச் சமூக மக்களும் இணைந்து சுமுகமாக வாழக்கூடிய வகையில் ‘தி இந்து’ நாளிதழ் தனது கட்டுரைகள் வழியாகச் செயல்பட்டுவருகிறது. கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு, அரசியல் என அனைத்து விஷயங்களிலும் மக்களின் உரிமைகளைக் காக்கும் வகையில் குரல் கொடுத்துவருவதில் முதன்மை இடத்திலிருக்கிறது ‘தி இந்து’ நாளிதழ். தமிழ்ப் பத்திரிகை உலகில் யாரும் சொல்லாத விஷயங்களை, குறிப்பாக உண்மையான வரலாற்று நிகழ்வுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிவருகிறது. ராமசந்திரா குஹா, அ.கா.பெருமாள், பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோரின் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நமது நாட்டில் மாநிலத் தலைவர்கள், மாநிலக் கட்சிகள் பலவீனப்பட்டிருக்கும் சூழலில், மாநிலங்களின் உரிமைக்காக ‘தி இந்து’ குரல் கொடுத்துவருவதைப் பாராட்டியே ஆக வேண்டும். குறையாகச் சொல்ல எதுவும் இல்லை. ஆனாலும், உள்ளூர் செய்திகளை அதிகரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x