Published : 07 May 2016 10:36 AM
Last Updated : 07 May 2016 10:36 AM

வாக்காளர் வாய்ஸ்: எந்த வகையில் அது முக்கியத்துவம் வாய்ந்தது?

இந்த வாரத்துக்கான தலைப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் தங்களை மிகவும் கவர்ந்த வாக்குறுதி/திட்டம் எது? எந்த வகையில் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறீர்கள்.

மகேந்திரன், போரூர்

ஒரு முக்கிய கட்சி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனு மதிக்க மாட்டோம், சில்லறை வியாபாரி களை பாதுகாப்போம் என்ற திட்டம் மிக முக்கியமானது. இதனால் லட்சக்கணக்காக சில்லறை வியாபாரிகள் பயனடைவார்கள்.

சூர்யா தமிழழகன், கோட்டூர்புரம்

அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் யாவும் சிறப்பான திட்டங்களை உள்ளடக்கி உள்ளன. மது விலக்கு கொண்டு வருவோம். அரசு ஊழியர் களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம். தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை களை எடுப்போம் என்று ஒரு கட்சி தேர்தல் அறிக்கை கூறுகிறது. மற்றொரு கட்சியின் அறிக்கையில், பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு பேருந்து வசதி செய்யப்படும். கேரள மாநிலத்தில் உள்ளது போல, பஞ்சா யத்து தலைவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். அரசுப் பேருந்துகளில் போதிய பணியாளர்களை நியமிக்காமல் ‘ஓவர் டைம்’ அடிப்படையில் பணி வாங்கு வது நிறுத்தப்படும் என்பன போன்ற பல நல்ல திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னொரு கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இலவச கல்வி, தேசிய நுழைவுத் தேர்வுகளுக்காக மாணவர் களுக்கு முன்கூட்டியே பயிற்சி, லாபத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து, அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் என பல்வேறு திட்டங்கள் கூறப் பட்டுள்ளன. இந்த சூழலில், வாக்காளர்கள் அவரவர் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் நல்லவர் யார்? என்பதை பார்த்து, சிறந்த ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும்.

பா.வரதராஜன், சாலிகிராமம்

ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு வேலை என்ற தேர்தல் அறிக்கை திட்டம் வரவேற்கக்கூடியது. ஒரு குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால், அவர் மூலமாக அந்த குடும்பம் முன்னேறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். மேலும் உயர் கல்வி பயிலாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் ஊக்கத்தைக் கொடுக்கும். இதனை உணர்ந்து, முதல் பட்டதாரிக்கு அரசு வேலை என்ற வாக்குறுதியை நான் வரவேற்கிறேன்.

புஷ்பவல்லி, செங்கல்பட்டு

ஒரு கட்சி வெளியிட் டுள்ள தேர்தல் அறிக்கை யில் அனைத்துப் பிரிவு தொழிலாளர் களுக்கும் பயன் தரக் கூடிய திட்டங்களை கொண்டுள்ளது. வீடு களுக்கு பயன்படுத்தப் படும் மின்சாரத்துக்கு மாதந்தோறும் மின் கட்ட ணம் செலுத்தும் முறை மக்களுக்கு பயன் படும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தரப்படும் என்று கூறியிருப்பது, விவசாயிகளுக்கு பயன் தரும். தொழிற் சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் என்று பல்வேறு தொழிற்பிரிவினருக்கும் ஏற்ற வகையில் திட்டங்களை கொண்டுள்ள தேர்தல் அறிக்கை நன்றாக உள்ளது.

கே.லட்சுமிநாராயணன், வியாசர்பாடி

ஆட்சி செய்தவர்களைவிட, புதிய வர்கள் கொடுக்கும் தேர்தல் அறிக்கைகளை நான் ஆதரிக்கிறேன். ஆட்சியில் இருந்தவர், அப்போதெல் லாம் செய்யாததை, இனிமேல் செய்யப்போவதாக கூறுவது, அவர்கள் இதுநாள் வரை சிறப்பாக செயல்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. மேலும், ஒவ்வொரு தேர் தலிலும் குறிப்பிட்ட கட்சிகளுக்கே மாறி மாறி வாக்களித்து வருகிறோம். ஆட்சியில் இருந்தவர்கள், அவர் கள் செய்த சாதனைகளைக் கூறி, வாக்கு கேட்பதுதான் நியாயமாக இருக்கும். ஆனால், அவர்கள் இன்னமும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பல திட்டங்களை செய் வோம், எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த் துங்கள் என்று கேட்பது சற்று வேடிக்கை யாகவே இருக்கிறது. எனவே, புதிய கட்சி களின் தேர்தல் அறிக்கையை நான் வரவேற்கிறேன். ஆட்சிக்கு வராத இவர்கள், ஒவ்வொரு துறை ரீதியாக, பொருளா தார அடிப்படையில் மக்களின் பிரச்சினை களை ஆராய்ந்து, அவற்றுக்கு தீர்வு தரும் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளனர். குறிப்பாக, நாட்டின் இன்றைய முக்கியத் துறையாக இருக்கும் விவசாயத் துக்கும், முக்கிய பிரச்சினையாக இருக்கும் தண்ணீர் பற்றாக்குறைக்கும் ஒரு புதிய கூட்டணியும், கட்சியும் நல்லதொரு தீர்வை கையில் வைத்துள்ளனர். நாட்டில் நிலவி வரும் லஞ்சம், ஊழல் போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம், இதற்கு முன்னர் ஆட்சி செய்த கட்சிகளின் நிர்வாக திறமையின் மையும்தான். இன்னும் சொல்லப்போனால், முந்தைய ஆட்சியாளர்கள் பலரும், பழைய வேட்பாளர்களுக்கே மீண்டும் சீட் வழங்கி யுள்ளனர். இந்நிலையில், கட்சித் தலைமை நேர்மையாக செயல்பட்டாலும், முந்தைய வேட் பாளர்கள் நேர்மையாக செயல்படுவார்களா? என்பது உறுதியாகத் தெரியாது. ஊழலை ஒழிக்க, லோக் ஆயுக்தா அமைப்பு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ள தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கேள்வி வெளியாகும். அதற்கு நீங்கள் பதிவு செய்யும் யோசனைகள் அடுத்த சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். அடுத்த வாரத்துக்கான கேள்வி நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

அதற்கான உங்கள் யோசனைகளை கருத்துக்களை ஞாயிறு முதல் வெள்ளி வரை 044-42890002 எண்ணில் நீங்கள் பதிவு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x