Published : 12 Apr 2016 10:46 AM
Last Updated : 12 Apr 2016 10:46 AM

வாக்காளர் வாய்ஸ்: யாருக்காக வாக்கு?

இந்த வாரத்துக்கான தலைப்பு



வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், எதை பிரதான அம்சமாகக் கருதி வாக்களிக்க வேண்டும்? கட்சியா... அதன் தலைவர் மீதான ஈடுபாடா... அல்லது, உங்கள் தொகுதி வேட்பாளரா..? இதில் எதுவானாலும் கட்சி/தலைவர்/வேட்பாளரின் எந்தத் தகுதிக்கு முதலிடம் அளித்து வாக்களிக்க முடிவு செய்ய வேண்டும்?

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.



சங்கர், சென்னை

எந்த கட்சியும் ஒழுங்காக இல்லை. அனைத்துக் கட்சிகளுமே தங்கள் கட்சி நலனையே முதன்மையாக கருதுகிறார்கள். கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் கட்சியும் இருக்கும். நாங்கள் வேட்பாளரை நம்பி ஓட்டுப்போடுகிறோம். ஆனால் அவர்கள் கட்சித் தலைவர் சொல்வதைத்தான் கேட்போம் என்கிறார் கள். கட்சி, தலைவர், வேட்பாளர் யாருமே ஒழுங்காக இல்லை. எனவே மக்கள்தான் ஜனநாயக விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.



அகஸ்டின், மாதவரம்

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிகளின் அடிப்படையில்தான் வாக்களிக்க வேண்டும். இன்றைய சூழலில் நிறைய கட்சிகள் இருந்தாலும் நல்ல கட்சி எது என்பதை அடையாளம் காட்டுவதில் பத்திரிகைகள் குழப்பத்தைத்தான் ஏற் படுத்தி வருகின்றன. மக்கள் இதனால் குழம்பி நல்லது செய்யாத கட்சிகளை நம்பி வாக்களித்து வெற்றிபெறச் செய்துவிடுகிறார்கள். எனவே கட்சிகளின் அடிப்படையில்தான் வாக்களிக்க முடிவு செய்ய வேண்டும். கட்சிகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் அவர்களின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.



செல்வக்குமார், பாரதிநகர், சென்னை

எந்தக் கட்சிகள் மீதும் நம்பிக்கையில் லாமல் இருந்தாலும் எனது வாக்கை நோட்டாவுக்குப் போட்டு வீணாக்காமல், எனது தொகுதியின் ஏதாவதொரு வேட்பாளருக்கே வாக்களிப்பேன். நீங்களும் ஓட்டுப் போடுங்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்.



மேகி மல்லையா, திருவான்மியூர்

தேர்தலில் வாக்களிக்க கட்சி, தலைவர், வேட்பாளர் ஆகிய மூன்றையுமே கருத்தில் கொள்ள வேண்டும். கட்சியை வைத்துதான் அதன் தலைவரை தீர்மானிக்கிறோம். தலைவரை வைத்துதான் தொகுதி வேட்பாளரை தீர்மானிக்கிறோம். ஒவ்வொரு மக்களும் நுண்ணறிவோடு செயல்பட்டு கட்சியைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் மற்றும் வேட்பாளரைப் பற்றியும் ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்களின் கல்வியறிவு, தொலைநோக்கு பார்வை மற்றும் சிறந்த தலைவராக மக்களை வழிநடத்தும் திறன் ஆகியவற்றை வைத்து வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.



ஜவஹர், முகலிவாக்கம்

சட்டமன்றத் தேர்தலில் கட்சி களை கவனத்தில் கொண்டு, அதன் கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் எவை மற்றும் கடந்த காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஆகியவற்றைப் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். கட்சியின் தலைவர் மீதான ஈடுபாடோ, தொகுதி வேட்பாளரின் தன்மையை வைத்தோ வாக்களிப்பதை தீர்மானிக்க முடியாது. கட்சியின் கொள்கையைக் கொண்டுதான் வாக்களிக்க வேண்டும்.



ஆர்.நேரு, புதுப்பெருங்களத்தூர்

கொள்கை உறுதியுடன் கூடிய கட்சியா என்றுதான் பார்க்க வேண்டும். ஏனெனில் தலைவர்கள் பலநேரம் தடம்புரண்ட வரலாறு உண்டு. தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே விலைபோன வேட்பாளர்கள் எல்லாம் உண்டு. எனவே நல்ல சிந்தாந்தம், உறுதியான கொள்கை கொண்ட கட்சியைத்தான் தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும்.



பெயர் வெளியிட விரும்பாத வாசகி

தேர்தலில் வாக்களிக்க கட்சியையும், அதன் தலைவரையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தொகுதி வேட்பாளரைப் பொருத்தவரையில் அவர்கள் அக்கட்சியின் தலைமையைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. இதில் அனைத்துக் கட்சிகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இதற்கு முன் யார் சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும்.



எஸ்.வி.சங்கரன், மந்தைவெளி

தேர்தலில் நிற்கும் கட்சிகளின் சின்னங்களைப் பார்ப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றி தெரிந்து கொண்டு, அவர்களில் யார் நல்லவர் என்ற அடிப்படையில் சுயேட்சை வேட்பாளராக இருந்தாலும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நல்லவர்களெல்லாம் சேர வேண்டிய இடம் சட்டசபை. அப்போதுதான் நல்லதே நடக்கும்.



பெயர் வெளியிட விரும்பாத வாசகி

வருகிற சட்டமன்றத் தேர்தலில் கட்சித் தலைவரை கருத்தில் கொண்டுதான் வாக்களிப்பேன்.



பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

வேட்பாளர்களை வைத்துதான் தேர்தலில் வாக்களிப்பதை முடிவு செய்வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x