Published : 05 Apr 2016 09:48 AM
Last Updated : 05 Apr 2016 09:48 AM

வாக்காளர் வாய்ஸ்: தேர்தல் ஆணைய செயல்பாடுகளும், அதிகாரங்களும்

இந்த வாரத்துக்கான தலைப்பு



குறுக்கீடுகள் இன்றி, தேர்தலை மேலும் செம்மையாக நடத்துவதற்கு வசதியாக, தேர்தல் ஆணையத்துக்கு வேறென்ன அதிகாரங்கள் கொடுக்கலாம்? தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்?

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

மகிமைபிரகாசி, வேளச்சேரி

நம் நாட்டின் தற்போதைய சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னர்கள் என்ற தவறான போக்கு நிலவு கிறது. எனவே தேர்தல் காலத்தில் வேறு புதிய அரசுப் பணிகள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்கிற நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் பதவியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரையில் கவர்னர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே அரசு இயந்திரம் இயங்க வேண்டும். தற்போது உள்ளது போல் அதிகார மையம் என்பது அரசா? தேர்தல் ஆணையமா? என்கிற குழப்பம் தேர்தல் நடத்தும் அரசு ஊழியர்களுக்கோ, காவல் துறை யினருக்கோ தேர்தல் காலத்தில் இருக்கக் கூடாது. அதாவது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்பது ஓரளவாவது உண்மையாக வேண்டுமென்றால் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு கட்சியிடமோ, தனி நபரிடமோ ஆட்சி என்கிற அதிகாரம் இருக்கவே கூடாது.



பி.சங்கரன், நங்கநல்லூர்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கடைசி நேரத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதுபோன்ற சூழ்நிலை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். இந்திய ஆட்சிப் பணியிலுள்ள வேறு மாநிலத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு அதிகாரிகளை தற்போதைய மாநில தேர்தல் கமிஷனருடன் இணைந்து ஒரு குழுவாக, மத்திய தேர்தல் ஆணையம் போல செயல்படும்படி செய்தால் இதுபோன்ற சர்ச்சைகளைத் தவிர்க்க வாய்ப்பாக இருக்கும்.



தூயமூர்த்தி, தண்டையார்பேட்டை

தேர்தல்களில் பூத் சிலிப் தேர்தல் ஆணையம் மட்டும்தான் கொடுக்க வேண்டும். கட்சிகள் வழங்க அனுமதிக் கக் கூடாது. 60 சதவீதம் கிரிமினல் குற்றவாளிகள்தான் தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். இவர்களை போட்டி யிட அனுமதிக்கக் கூடாது. மேலும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் கடந்த தேர்தலின் சொத்து மதிப்புக்கும், இந்த தேர்தலுக்கும்போது உள்ள மதிப் புக்கும் பத்து மடங்கு உயர்ந் துள்ளது. இதுபோன்றவர்களையும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.



மேகி, திருவான்மியூர்

ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி களாக இருந்தாலும் அவர்கள் தேர்தலை அச்சுறுத்தும் வகை யில் அதிகமான அழுத் தம் கொடுத்தால் அவர்களைத் தண்டிக்கும் முழுமையான அதிகாரத்தை ஆணையத்துக்கு வழங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் என் வாக்கு, என் உரிமை என்ற கோஷம் மனதில் பதிவதற்காக, நடிகர்களைத் தவிர சாதாரண மக்களையும் தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றச் செய்ய லாம். மேலும் சாமான்ய மக்கள், மாணவர்கள் என ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேர்தலில் பணம் வாங்காமல் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டியது பற்றிய விழிப்புணர்வை தேர்தல் அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.



கோ.கிருஷ்ணசாமி, ஆவடி

தேர்தலில் போட்டியிடுகின்ற ஒவ்வொரு கட்சியின் சார்பாக தொகுதிக்கு 3 பேர் வீதம் தேர்ந்தெடுத்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிட வேண்டும். இந்த மூன்று பேரின் நிறை-குறைகளை ஆராய்ந்து இவர்களில் சிறந்தவரை அந்தந்தக் கட்சிகளின் சார்பாக தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும். அப்படி அதிகாரம் வழங்கப்படும் பட்சத்தில் வீடும், நாடும் நன்றாக இருக்கும்.



எம்.நடராஜன், சின்னகாஞ்சிபுரம்

தேர்தலில் பணம் கொடுப்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ஏழை மக்கள்தான் மிகவும் பாதிக்கப்படு கிறார்கள். தேர்தல் ஆணையம் வீடு வீடாக விசாரணை நடத்தினால் என்னைப் போன்ற வர்கள் பணம் கொடுத்தவர்களைப் பற்றிச் சொல்ல தயாராக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பெயர் வெளியிட விரும்பவில்லை

தேர்தல் ஆணையம் நடத்தும் வாகனச் சோதனையில், கல்லூரிக்கு எனது மகளை அனுப்பி வைக்கும் காரை ஒவ்வொரு தடவையும் சோதனையிடுகிறார் கள். இதனால் குறித்த நேரத்தில் கல் லூரிக்குச் செல்ல முடியவில்லை. அத்து டன் வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகையை உரியகாலக்கெடுவுக்குள் மீட் பதற்காக யாரிடமாவது கடன் கேட் டால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக் கைகளை காரணம் காட்டி, பணம் தரு வதற்கு பயப்படுகிறார்கள். இதனால் அவ சரத் தேவைகளுக்கு கடன் கிடைப்பதில்லை.



பெயர் வெளியிட விரும்பவில்லை

தேர்தல் தேதி அறிவித்தவுடன் கவர்னர் ஆட்சி கொண்டுவர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x