Published : 26 Apr 2016 12:06 PM
Last Updated : 26 Apr 2016 12:06 PM

வாக்காளர் வாய்ஸ்: கேட்க வேண்டிய கேள்வி!

இந்த வாரத்துக்கான தலைப்பு:

வேட்பாளர்கள் கும்பிட்ட கரங்களுடன் வீதி வீதியாக வந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டார்கள். உங்களைத் தேடி வரும், உங்கள் தொகுதி வேட்பாளர்களிடம் நீங்கள் முக்கியமாக என்ன கேள்வி கேட்பீர்கள். அதற்கு அவர் தரும் எந்த பதில் உங்களை திருப்திபடுத்தும். கேள்வியையும் பதிலையையும், ஏன் இந்த கேள்வி என்ற காரணத்தோடு கூறி பதிவு செய்யுங்கள்.

மகேந்திரன், போரூர்

வேட்பாளர்களை கேள்வி கேட்பதே கடினம். இருந்தாலும் வரும் வேட்பாளர் களிடம் கடந்த முறை நீங்கள் பதவியி லிருந்தபோது இந்த தொகுதிக்கு என் னென்ன செய்தீர்கள்? தற்போது நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் வரும் பதவிக் காலத்தில் தொகுதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள். என்ன திட்டங்கள் வைத்திருக் கிறீர்கள்? அவ்வாறு நீங்கள் நன்மை செய்யா விட்டால் உங்களை எங்கு வந்து கேட்பது? என்று கேட்கவும், உங்களால் முடிந்த அளவு இந்த பகுதிக்கு உதவிகள் செய்யுங்கள், மக்களின் தேவையை புரிந்துகொண்டு தேவையான நன்மையைச் செய்யுங்கள். அவைதான் வரலாற்றில் மிஞ்சும். அதனால் தான் ஐம்பது ஆண்டுகள் ஆகியும் காமராஜ ரையும், கக்கனையும் இன்றும் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம் என்று கோரிக்கை வைப்பதும்தான் என்னுடைய ஆசை.

எத்திராஜன்,மேற்கு சைதாப்பேட்டை

வேட்பாளர்களிடம் நீங்கள் தொகுதிக்கு என்ன பணிகளை செய்யப் போகிறீர்கள்? அவ்வாறு சொல்லுகின்ற பணி களை பட்டியலிட்டு கண்டிப்பாக நிறை வேற்றுவேன் என அக்கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளரின் கையெழுத்துடன் உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும். அவ்வாறு உறுதிமொழி பத்திரம் வழங்கி னால் நான் கண்டிப்பாக திருப்தி அடை வேன். நான் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் என்றால் அப்போதுதான் வேட்பாளருக்கு வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டுமென்ற பயம் இருக்கும்.

சேகர் சேஷாத்ரி, குரோம்பேட்டை

பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட எங்கள் குரோம்பேட்டை பகுதியில் எந்த வேட்பாளர் வாக்கு கேட்டு வந்தாலும் நான் கேட்கப்போகும் ஒரே கேள்வி “இங்குள்ள ரயில்வே சுரங்கப் பாதையை எப்பொழுது பயன்பாட்டுக்கு கொண்டு வருவீர்கள்?” என்பதுதான். ஏன் என்றால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும்போது நிறைய விபத்துக்களைச் சந்திக்க நேரிடுகிறது. சுரங்கப் பாதை தயாராகிவிட்டால் எங்களுக்கு நிறைய நேரமும் மிச்சமாகும். தற்போது நீண்டதூரம் சுற்றிவர வேண்டியுள்ளது. இந்த சுரங்கப் பாதையை எங்களுக்கு விரைவில் அமைத்து தருபவர்களுக்கே இந்த தேர்தலில் வாக்களிக்கலாம் என முடிவெடுத்துள்ளோம்.

மேகி மல்லையா, திருவான்மியூர்

உங்கள் கட்சிகளின் நிறைகளைச் சொல்லி எங்களிடம் வாக்குக் கேட்டு வந்துள்ளீர்கள். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எங்கள் வீடு தேடி வருகிறீர்கள். இதையே ஏன் மாதம் ஒருமுறை செய்வதில்லை. நீங்கள்கூட வரவேண்டாம். மாதம் ஒருமுறை அருகிலுள்ள ஏதேனும் பள்ளிக்கூடத்தில் வந்து உட்காருங்கள். நாங்கள் வந்து எங்கள் குறைகளைக் கூறுகிறோம். ஒவ்வொரு மக்களின் குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்தாலே அனைத்து தொகுதிகளும் செம்மையாக மாறிவிடும்.

என்னுடைய குறையை எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேட்டிருந்தால் எனக்கொரு நல்லவழி கிடைத்திருக்கலாம்,

வி.யமுனாராணி, விருகம்பாக்கம்

வெள்ள பாதிப்பின்போது எங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் தந்தார்கள். எந்த வேட்பாளராக இருந்தாலும் ஏழை களை கவனிக்கிறார்கள் அல்லது பணக்காரர்களைக் கவனிக்கிறார் கள். நடுத்தர வர்க்கத்தை யாருமே கண்டுகொள்வதில்லை. எனவே வாக்கு கேட்டு வந்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடு களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வேட்பாள ரின் கையெழுத்திட்ட உறுதி மொழியை ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்தால்தான் அவர்களுக்கு வாக்களிப்போம் என தெரிவிப்போம்.

அருணாச்சலம், சென்னை

வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் நிச்சயமாக யாரும் கேள்விகளைக் கேட்கமாட்டார்கள். குறைகள் பல இருந்தாலும் தனிப்பட்ட முறையில் யாரும் கேள்விகளைக் கேட்க முன்வர மாட்டார்கள். குறிப்பிட்ட சிலர் கூட்டமாக இருந்தால் ஒருவேளை அவர்கள் கேள்விகளைக் கேட்கலாமே தவிர, வேட்பாளர்களிடம் தனியாக நின்று யாரும் கேள்விகளைக் கேட்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. வேட்பாளர்களுடன் வாக்கு சேகரிக்க வருபவர்கள் அந்த பஞ்சாயத்தின் தலைவராகவோ, உள்ளூர் கட்சிப் பிரமுகராகவோ, கவுன்சிலராகவோதான் இருப்பார்கள். நமக்கு உண்மையிலேயே அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் இருந்தாலும்கூட, வாக்கு கேட்டு வரும்போது அதுகுறித்து கேள்வி எழுப்ப முடியாது. அந்த வேட்பாளர் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதர்கள் பின்னர் பழிவாங்கப்படுவார்கள். எவ்வளவோ அரசு அலுவலகங்களில் புகார்கள் தெரிவிக்கலாம் என்ற வசதி இருந்தும்கூட, மக்கள் அதனைப் பயன்படுத்தி புகார்களைத் தெரிவிப்பதில்லையே.

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x