Published : 20 Jul 2015 09:44 AM
Last Updated : 20 Jul 2015 09:44 AM

அகதிகள் உலகம்

*உலகமெங்கும், 5.95 கோடிப் பேர் தங்கள் வாழிடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். உலக நாடுகள் பலவற்றில், உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப் பவர்களின் எண்ணிக்கை 3.82 கோடி.

*உலகமெங்கும் உள்ள அகதிகளின் எண்ணிக்கை 1.95 கோடி. இவர்களில் 18 வயதுக்குட்பட்ட அகதிகளின், அதாவது சிறுவர்களின் கணக்கு 51%.

*வளரும் நாடுகளில் மட்டும் இருக்கும் அகதிகளின் எண்ணிக்கை 86%.

*மிகச் சமீபமாக, உள்நாட்டுக் கலவரம், அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் இடம்பெயர நேர்ந்த மக்களின் எண்ணிக்கை 1.39 கோடி. உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருக்கும் சிரியாவில் மட்டும், உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர நேரிட்ட மக்களின் எண்ணிக்கை 76 லட்சம். உலக அளவில் அதிகபட்ச எண்ணிக்கை இது.

*கடந்த ஆண்டு மட்டும் உலகின் பல நாடுகளில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை 16.6 லட்சம். அகதிகள் வரலாற்றில், அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்திருப்பவர்களின் அதிக எண்ணிக்கை இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x