Published : 02 Jun 2015 05:16 PM
Last Updated : 02 Jun 2015 05:16 PM

முன்னாள் அமைச்சர்கள் தப்பிக்காமல் இருக்கவே மேல்முறையீடு: ராபர்ட்

செய்தி:>சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அமைச்சரவை முடிவு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ராபர்ட் கருத்து:

இந்த வழக்கில் மேல்முயீடு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் இனி இந்தியாவில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுக்கமுடியாது.

இந்த வழக்கில் நீதியரசர் குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் பயன் அதிமுக அரசால் திமுக.பல முன்னாள் அமைச்சர்கள் மீது தொடரப்பட்டு தற்சமயம் தமிழகத்தின் பல நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் வழக்குகளில் இருந்து எளிதாக விடுபட உதவும்.

இதன் திமுக முன்னால் அமைச்சர்களே உடனடி பயன் பெறுவார்கள். மேலும் இந்த வழக்கில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் புலனய்வு அமைப்பு வருமானத்துக்கு தெரியகூடிய வருவாய்க்கு அதிகமான வருவாய் மற்றும் சொத்துக்களை கண்டுபிடித்து குற்றப் பத்திரிக்கை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக் காலத்தில் குற்றம் சுமத்தப்பட்ட வருமானத்திற்கு வருமானவரி செல்லுத்திவிட்டதால் குற்றவாளி இல்லை என்று தீர்மானிப்பது சரியா என்ற கேள்விகள் எழுகின்றன.

இவற்றை எல்லாம் அரசியல் கண்ணோட்டத்துடன் நோக்காமல். நீதி, சமூகத்தில் நேர்மை ஆகிய உயர் நெறிகளை காக்கும் நோக்குடன் கருத்து கூறுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x