Published : 20 May 2015 05:49 PM
Last Updated : 20 May 2015 05:49 PM

எவர் ஊழல் செய்தாலும் அபிமானம் தேவையில்லை: செ

செய்தி:>22-ம் தேதி தலைவர்கள் சிலைக்கு மரியாதை: முதல்வராக ஜெ. 23-ல் பதவியேற்பு - ஏழு மாதங்களுக்குப் பின் மக்களை சந்திக்கிறார்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் செ கருத்து:

நம் கை மகவுகள் அருந்தும் பாலிலும் கலப்படம் செய்யும் கயவர்கள் நாம் வணங்கும் கடவுளுக்கே அடியாராயினும் அவர்களை கைதுசெய்து நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆளாக்கும் நடைமுறை அரசியல் நிர்வாகம் இன்றைக்கெல்லாம் மூன்றுகால் முயல். கொம்பு முளைத்த குதிரை. முத்திரை குத்தப்பட்ட ஊழலால் நாடே மூடப்பட்டுள்ளது.

சமுதாய விழிப்புணர்வுக்கும், மாறுதல்களுக்கும் வித்திடும் நல்லவர்கள் இல்லை. இன்றைய அரசியல் அரங்கத்தில். அதில் முற்றிப் பழுத்த ஊழல் எட்டிக்காய்கள் மட்டுமே இனிப்பில்லா ஊருக்கு இலுப்பைப் பூவென நம்மை ஏமாற்றி எக்காளமிடுகின்றன.

விழித்தெழுந்து, நாட்டின் பொதுச் சொத்தைத் தனதாக்கிக் கொண்டு கொடிகளின் மீது புரண்டு, நம்மை குலவையிட்டு கோஷம்போடவும் கூடி நிற்கின்றனர் பலர். ஊழல் புரிந்தவர் எவராயினும் அவர் கழுமரம் தொங்கவும் ஆளாக்கிய ஊழல் அரிதாரிகளை அகற்றி அரசியல் மேடையை புனரமைப்போம்.

ஊழலை இவர் செய்தார், அவர் செய்தார் என்று அரசியல் அபிமான நோக்கில் பார்க்காமல், அதைச் செய்பவர் எவரானாலும் அவர்கள் எழ விடாமல் நம் வாக்குகள் என்னும் வாளால் நேர்மை, அரசியலில் தூய்மை என்ற கதிர் அறுப்போம். நம்மை யார் ஆள வேண்டும் என்பதல்ல ஜனநாயகம். நாம் நாட்டை ஆள்வதே அது. நாடு ஊழலுக்கல்ல. நமக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x