Published : 28 May 2015 06:56 PM
Last Updated : 28 May 2015 06:56 PM

திட்டங்களுக்கு எதற்கு அம்மா பெயர்? - மனோகரன்

செய்தி:>பொதுமக்களிடையே வரவேற்பை பெற்ற அம்மா மருந்தகங்கள்: 15 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆர்.எம்.மனோகரன் கருத்து:

மக்கள் வரிப்பணத்தில் அரசால் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களுக்கு அம்மா உணவகம், அம்மா குடி நீர், அம்மா மருந்தகம் என்று ஜே-வின் அடைமொழியை வைத்து அழைத்தல் எந்த விதத்தில் நியாயம்? அரசின் கஜானாவிலிருந்து தனக்கு விளம்பரத்தைத் தேடி அலைவது ஏன் ஒரு மாநில அரசின் முதல் மந்திரி? இச்செயல் அசிங்மானது அநாகரிகமானது என்பது முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவருக்குப் புரியாதா?

கருணாநிதி ஆட்சியில் நந்தனத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு கட்டப்பட்ட 10 மாடி கட்டிடத்திற்கு "கருணாநிதி மாளிகை" என்று பெயர் வைத்தார். பின்னர் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். அதை நீக்கிவிட்டு "ஈ.வே.ரா மாளிகை" என்று பெயர் மாற்றினார். அதை கை கொட்டி ஆர்ப்பரித்து வரவேற்ற அதிமுகவினர் இப்போது ஜேவின் அராஜகச் செயலுக்கு துணை போவதேன்?

டாஸ்மாக் கடைகளுக்கு அம்மா மதுபானக்கடை எனப்பெயர் வைக்க அஞ்சும் அவர், மற்ற திட்டங்களையும் அரசு உணவகம், அரசு குடி நீர், அரசு மருந்தகம் என்று பெயர்களை மாற்ற வேண்டும். தேர்தல் சமயங்களில் இந்தப் பெயர்களை மறைக்க தேர்தல் ஆணையம் மிகவும் கஷ்டப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் தலையிட்டு இவற்றை தடை செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x